மூக்குத்தி முருகனை ஏன் அடித்தீர்கள்? லைவ்-ல் கேட்கப்பட்ட கேள்வி..கடுப்பான வித்யூலேகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ என்றாலே காமெடி, கலாட்டா, அலப்பறைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி பற்றி சொல்லவே வேண்டாம். உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் மக்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு குக்குகள் உடன் சேர்ந்து கோமாளிகள் அடிக்கும் லூட்டிகள் வேறு லெவெலில் இருக்கும். காமெடி கலாட்டா, நட்பு, காதல் என்று எல்லா வகையான கன்டென்ட்-உம் கிடைக்கிற ஒரு இடமாக அந்த நிகழ்ச்சி இருக்க்கும் காரணத்தினால்தான் அந்த நிகழ்ச்சி இவ்வளவு வெற்றி அடைந்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

மூக்குத்தி முருகனை ஏன் அடித்தீர்கள்? லைவ்-ல் கேட்கப்பட்ட கேள்வி..கடுப்பான வித்யூலேகா 1

விளம்பரம்

தற்போது இரண்டு சீசன்கள் நடந்து முடிந்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும், புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், ஷீத்தல், அருண், மூக்குத்தி முருகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டு உள்ளார்கள்.

மூக்குத்தி முருகனை ஏன் அடித்தீர்கள்? லைவ்-ல் கேட்கப்பட்ட கேள்வி..கடுப்பான வித்யூலேகா 2

விளம்பரம்

 

கடந்த வாரம் நடந்த எபிசோடில் வித்யூலேகாவிற்கு கோமாளியாக சூப்பர்சிங்கர் வெற்றியாளர் மூக்குத்தி முருகன் உடன் சமைத்தார். அப்போது வித்யூலேகா அவரை “வாயா போயா” என்று அழைத்தார், சமையலுக்கு நடு நடுவே அவரை அடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றன. இதை தொடர்ந்து லைவ்-ல் வந்த அவரிடம் முருகனிடம் ஏன் அவ்வாறு கடுமையாக நடந்து கொண்டீர்கள் என்று திரும்ப திரும்ப கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு விளக்கம் அளித்த வித்யூலேகா தான் வேண்டும் என்றே அவ்வாறு செய்யவில்லை. முருகனே தன்னிடம் வந்து தன்னை அடிப்பது போன்று செய்ய சொன்னதால் தான் அவ்வாறு செய்தேன் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் குக் வித் கோமாளி ஷோவில் யாரும் யாரையும் அடிப்பது இல்லை என்றும், உங்களை மகிழ்விப்பதற்க்காக அவ்வாறு காட்டப்படுகிறது என்றும் அவர் கூறினார். Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment