The Indian Times

டேய் சிம்பு யாருடா நீ…மேடையில் கொந்தளித்த COOL சுரேஷ்

கூல் சுரேஷை தற்போது தமிழகத்தில் தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.அந்தளவிற்கு வைரலாகி பலராலும் இன்று அறியப்பட்டவர் ஆகினார்.இவர் 2001 ஆம் ஆண்டு சாக்லேட் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பல முன்னணி நடிகர்கள் படத்திலும் இவர் நடித்து விட்டார்.தமிழ் சினிமாவில்,ரவுடி,அடியாள் ,நண்பர் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தது போல் நடித்து பட்டையை கிளப்பும் திறமை கொண்டவர் கூல் சுரேஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

வாரம் தோறும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் நாளன்று படக்குழு திரையரங்கு வருவார்களா என்பது தெரியாது ஆனால் கூல் சுரேஷ் வந்துவிடுவார்.படத்தினை பார்த்து முதல் ஆளாக வெளியே வந்து கருத்து தெரிவிப்பார்.இவ்வாறு கருத்து தெரிவித்து தெரிவித்து இன்று பெரும் பிரபலமாக மாறியுள்ளார் கூல் சுரேஷ்.எந்த படம் வெளியானாலும் இவரின் கருத்தினை கேட்க ரசிகர்கள் ஆவலாக இருப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.மேலும் இவ்வாறு பிரபலமாகியதில் படவாய்ப்பு அவர்க்கு வந்துகொண்டு உள்ளது.

Advertisement

இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.அங்கு சிம்பு ரசிகர்கள் இவருக்கு கொடுத்த ஆதரவினை கண்டு கலங்கியுள்ளார்.மேலும் மேடையில் டேய் சிம்பு யாருடா நீ,உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் என கூறி வெந்து தணிந்தது காடு சிம்புக்கு வணக்கத்தை போடு என கத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த சிம்பு ரசிகர்கள் என்ன திடீர்னு சிம்புவை மரியாதை இல்லாம பேசிட்டிங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்

Embed video credits : BEHINDWOODS TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in