நடிகர் மோகன் லால் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவு

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன் லால்.மோகன் லாலை தெரியாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள் அந்த அளவிற்கு சிறந்த நடிகர் இவர்.இவருக்கென கேரளாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாளை திருவிழா போல இவரது ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம் அந்த அளவிற்கு இவர் ரசிகர்கள் கூட்டத்தினை தனது நடிப்பால் சேர்த்து வைத்துள்ளார் என்று கூறினால் மிகையாகாது.மலையாள நடிகர் ஆன இவர் முதல் முறையாக 1980 ஆம் ஆண்டு வெளியாகிய மஞ்சில் விரிஞ்சு பூக்கள் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து ஹிட் கொடுக்க தொடங்கினார்.இந்த வெற்றி இவரை மலையாள சூப்பர் ஸ்டார் ஆக்கியது

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

நடிகர் மோகன் லால் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவு 1

விளம்பரம்

தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்த இவர் முதன் முதலாக 1997 ஆம் ஆண்டு வெளியாகிய இருவர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார்.தமிழிலும் சில படங்களை நடித்து ஓரளவுக்கு ரசிகர்கள் கூட்டத்தினை வைத்துள்ளார் மோகன் லால்.இவர் மலையாள படங்கள் மட்டுமில்லாமல்,தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.தற்போது இவரது மகனும் நடிக்க தொடங்கிவிட்டார்,இருப்பினும் மோகன் லாலுக்கு கூடும் கூட்டம் குறைவதில்லை அந்த அளவிற்கு மோகன் லால் சினிமாவில் பெயர் வாங்கியுள்ளார்.நடிகர் ஆக மட்டுமில்லாமல் தற்போது இயக்குனர் அவதாரமும் எடுத்து பரோஸ் என்கிற படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்திற்கு இவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பு வெகுவாக நடந்து வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  ரட்சிதா மஹாலக்ஷ்மியின் மொட்டைமாடி போட்டோஷூட் புகைப்படங்கள்

நடிகர் மோகன் லால் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவு 2

விளம்பரம்

இந்நிலையில் நடிகர் மோகன் லால் மீது நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.மோகன் லாலுக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் அவரது கொச்சியில் உள்ள வீட்டில் இருந்து யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன இதனால் மோகன்லால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு பெரும்பாவூர் குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று வரை நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கினை வாபஸ் பெற மனு அளித்தது கேரள அரசு,அதனை நிராகரித்து மோகன்லால் மீது மேல் நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட்டது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment