The Indian Times

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேறிய போட்டியாளர் இவரா? அடடா இவரு இல்லைன்னா நல்லா இருக்காதே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின்,மைம் கோபி,விஜே விஷால் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சி நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது.ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கும் பெரும் ஆதரவினை அளித்து வருகின்றனர்,முதல் எலிமினேஷன் சுற்றில் கிஷோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்றார்.

Advertisement

இரண்டாவது எலிமினேஷனில் மைம் கோபி,விஜே விஷால் இருவருமே நன்றாக சமைத்திருந்ததால் காப்பாற்றப்பட்டனர்.இது அனைவர்க்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில் இன்று மூன்றாவது எலிமினேஷன் நடைபெற்றுள்ளது.இந்த முன்றாவது எலிமினேஷனில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் காளையன் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிகழ்ச்சியில் அதிக காமெடி செய்யும் பாலா மற்றும் மணிமேகலை வெளியேறியுள்ள நிலையில் காளையன் தான் புகழையும் குரேஷியையும் போட்டு அடித்து துவைத்து மக்களை மகிழ்வித்து வந்தார் தற்போது அவரும் வெளியாகி இருக்கிறது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in