The Indian Times

பருத்திவீரன் கார்த்தி போல மாறி ஆட்டம் போட்ட நடிகர் நானி… தசரா FIRST SINGLE

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானி,தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் இவர் நடிப்பிற்கு ரசிகர்கள் உள்ளனர்.இவர் 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகிய அட்டா சம்மா படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.வெப்பம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.அதன்பின் இவருக்கு தமிழில் வெளியாகிய நான் ஈ படம் நல்ல வரவேற்பினை பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நானி தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு நடித்து வருகிறார். இடையில் சில படங்கள் சரியாக வரவேற்பினை பெறாததால் இனி நடிக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என நடித்து வருகிறார்.தற்போது இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் தசரா படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது,தற்போது இப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளது.

Advertisement

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இயக்கத்தில் பாடலாசிரியர் விவேகா வரிகளில் தூம் தாம் தோஸ்து என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.பாடலில் நடனத்தில் பட்டையை கிளப்பியுள்ளார் நானி.இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : Saregama Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in