Trailer வெளியீட்டு விழாவுக்கு WHEEL CHAIR-ல் வந்த DD… என்னாச்சு DD-க்கு என பதறிய ரசிகர்கள்

தொகுப்பாளினியாக சின்னத்திரையை கலக்கி வருபவர் திவ்யா தர்ஷினி.நடிகைகளுக்கு இணையாக இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் பேராதரவினை பெற்றவர் திவ்யா தர்ஷினி .தொகுப்பாளர் வேலையே பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறார்.ஆரம்பத்தில் இருப்பது போல் தொடர்ந்து நிகழ்ச்சியில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் புகுந்து விளையாடி வருகிறார்.அண்மையில் உலக நாயகன் நடித்த விக்ரம் படத்தின் இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியினை டிடி சிறப்பாக தொகுத்து வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தற்போது சுந்தர் சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.இவர் அவ்வப்பொழுது சினி உலகிற்கு இடைவெளி விட்டு இருந்தாலும் இவர் எப்போ வந்தாலும் இவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் ரசிகர்கள்.தொகுப்பாளர்களுக்கும் அதிக ரசிகர்கள் உண்டு என்பதை நிரூபித்தவர் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Trailer வெளியீட்டு விழாவுக்கு WHEEL CHAIR-ல் வந்த DD... என்னாச்சு DD-க்கு என பதறிய ரசிகர்கள் 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் , காபி வித் டிடி என அனைத்து நிகழ்ச்சிகளும் சூப்பர் டூப்பர் ஹிட்.தனது எதார்த்தமான பேச்சினாலும்,குழந்தை போன்ற செயலினாலும் மக்களை கவர்ந்துள்ளார்.சிறந்த தொகுப்பாளர் என்ற விருதினை இவருக்கு விகடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.விஜய் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் நட்சத்திர தொகுப்பாளராக இருந்தவர் இவர்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது மேலும் பல சினிமா படங்களிலும் இவர் நடித்துள்ளார்.சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலுமே தனது கால் தடத்தினை பதிவிட்டு ஒரு கலக்கு கலக்கி வருகிறார் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி.

Trailer வெளியீட்டு விழாவுக்கு WHEEL CHAIR-ல் வந்த DD... என்னாச்சு DD-க்கு என பதறிய ரசிகர்கள் 2

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் காபி வித் காதல் என்ற படத்தில் நடித்துள்ளார்.இன்று இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த டிடி கால் நடக்க முடியாமல் வீல் சேரில் வந்துள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு நின்றபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து சென்றுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

https://www.youtube.com/shorts/NAxEd3Ef2AA

விளம்பரம்

Embed video credits : Behindwoods Tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment