பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமாகியவர் தனலட்சுமி. சாதாரணமாக செல்போன்களில் ரீல்ஸ் மற்றும் டிக் டாக் வீடியோ செய்து வைரலாகி இன்று உலக மக்களின் பார்வைக்கு தனது கடின உழைப்பினால் மேலே முன்னேறி வந்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் தனலக்ஷ்மிக்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல ஆதரவே கிடைத்து வந்தது.இந்த சீசனில் முதல் முதலாக குறும்படம் தனலக்ஷ்மிக்கு ஆதரவாகா தான் போடப்பட்டது.அந்தளவிற்கு நல்ல போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் வலம் வருபவர் தனலட்சுமி .
கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.மற்ற சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் ஆரம்பித்திலேயே போட்டியாளர்களிடம் சண்டை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முதல் வாரத்தில் சாந்தி மாஸ்டர் எலிமினேஷன் ஆகி சென்றார்.இரண்டாவது வாரத்தில் அசல் எலிமினேட் ஆகி சென்றார்.மூன்றாவதாக ஷெரின் சென்றார்.நான்காவதாக மகேஸ்வரி சென்றுள்ளார்.ஐந்தாவதாக நிவாஷினி வெளியே சென்றுள்ளார் .ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். ஏழாவதாக குயின்சி வெளியேறியுள்ளார்,எட்டாவதாக ராம் வெளியேறியுள்ளார் .ஒன்பதாவாக ஆயீஷா வெளியேறியுள்ளார்.பத்தாவதாக ஜனனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இந்நிலையில் தற்போது மீதமுள்ள போட்டியாளர்களுக்கு இடையே கடுமையாக போட்டி நிலவி வருகிறது
இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியே செல்ல ஷிவின்,விக்ரமன்,கதிர்,தனலட்சுமி,மைனா,ரட்சிதா மற்றும் அசீம் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்த நிலையில் தற்போது இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தனலட்சுமி யாரும் எதிர்பாராத விதத்தில் வெளியாகியுள்ளார்.இது தனலட்சுமி ரசிகர்களுக்கு பெரும் சொத்தினை ஏற்படுத்தினாலும்,அவர் மேல் கடுப்பில் உள்ள ரசிகர்கள் வெளியேறிய தனலட்சுமியை கலாய்த்து வருகின்றனர்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in