“இப்ப என்னால ஹிந்தில பேச முடியாது” போட்டியின் நடுவே நக்கல் அடித்த தல தோனி

ஐ.பி.எல் சீசன் வந்துவிட்டது. ரசிகர்கள் அனைவரும் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். கொரோன பரவலின் காரணமாக இந்த முறையும் ரசிர்கர்களுக்கு மைதானத்தில் அனுமதி கிடையாது என்று அரசாங்கம் உத்தரவிட்டது. இந்த சீசனில் தற்போது எந்த போட்டிகளிலும் தோற்க்கமால் முதல் இடத்தில் இருந்த கோலி தலைமையிலான RCB நேற்று சென்னை அணியிடம் முதல் தோல்வி அடைந்தது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்ட வீரர்கள் டுபளஸி மற்றும் ருத்ராஜ் கைகுவார்ட் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.

"இப்ப என்னால ஹிந்தில பேச முடியாது" போட்டியின் நடுவே நக்கல் அடித்த தல தோனி 1

விளம்பரம்

இருப்பினும் அதன் பின்னர் களம் இறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்தளை இழந்து சென்றனர். இந்நிலையில் அதன் பின்னர் களம் இறங்கிய ஜடேஜா கடைசி ஓவர் போட்ட ஹர்ஷல் படேல் ஓவரில் 5 சிக்ஸர் அடித்து 37 ரன்கள் அடித்து தெறிக்கவிட்டார். இருட்தியாக 192 ரன்களை சென்னை அணி பெங்களூரு அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. 192 அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கிய பெங்களூரு அணியின் துவக்க ஆட்டக்காரர் படிக்கல் சிறப்பாக ஆடி 15 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அவுட் ஆகி சென்றார். அதன் பின்னர் களம் இறங்கிய ஒவ்வொரு வீரர்களும் தொடர்ந்து விக்கெட்களை பறிகொடுக்க , சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

"இப்ப என்னால ஹிந்தில பேச முடியாது" போட்டியின் நடுவே நக்கல் அடித்த தல தோனி 2

விளம்பரம்

இந்நிலையில் ஜடேஜா 3 பெரிய விக்கெட்களை எடுத்து அசதி இருந்தார். அவர் பந்து வீசிய போது , பின்னாடி கீப்பிங் செய்து கொண்டிருந்த தோனி ஹிந்தியில் அவருக்கு எப்படி போட்டால் விக்கெட் எடுக்க முடியும் என்று கூறி கொன்டே இருந்தார். அதன் அடிப்படையில் ஜடேஜாவும் மாக்ஸ்வெல் மற்றும் டீ வில்லியர்ஸ் விக்கெட்களை வீழ்த்தினார். Dhoni in Yesterday’s Match Check Pic Below 

"இப்ப என்னால ஹிந்தில பேச முடியாது" போட்டியின் நடுவே நக்கல் அடித்த தல தோனி 3
Pic via Ratna Kumar Twitter

இந்நிலையில் இவர்களுக்கு அடுத்து விளையாட ஹர்ஷல் படேல் களம் இறங்கினார். அப்போது தோனி இனிமேல் என்னால் ஹிந்தியில் உனக்கு சொல்ல முடியாது என்று கேலியாக கூறினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விளம்பரம்

https://twitter.com/Shariff_ladka_/status/1386584463295926272

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment