அப்பாவை பத்தி பொய்யான  செய்தி பரப்பாதீங்க…வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்ரம் மகன் துருவ் விக்ரம்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விக்ரம்.நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர் இவர்.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சாதரண நடிப்பு தானே அதற்கு இத்தனை மெனக்கெடல்கள் தேவையா என்று நினைக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்பவர்.1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த சினிமாவிலும் கிடைக்கவில்லை தமிழ் படம் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.1999 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் சேது படத்தில் விக்ரம் நடித்தார்.இப்படத்தில் அவருடைய மொத்த உழைப்பையும் போட்டு தமிழ் சினிமாவையே அலற வைத்தார்.இப்படம் மாபெரும் வெற்றி கண்டது.

கட்டாயம் படிக்கவும்  விக்கியுடன் ஐபிஎல் பார்க்க வந்த நடிகை நயன்தாரா புகைப்படங்கள் இதோ

அப்பாவை பத்தி பொய்யான  செய்தி பரப்பாதீங்க...வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்ரம் மகன் துருவ் விக்ரம் 1

விளம்பரம்

தற்போது சினிமாவையே தனது நடிப்பினால் கலக்கி வருகிறார் விக்ரம்.இவர் நடிப்பில் அடுத்ததாக கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் வெளியாக உள்ளது.இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆவலுடன் காத்திருக்கின்றனர்56 வயதான விக்ரம் தற்போது உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார்,இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இன்று மாலை படத்தின் டீசர் வெளியாக இருந்த நிலையில் தற்போது நடிகர் விக்ரம் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் விக்ரமுக்கு மாரடைப்பு என செய்திகள் அதிகம் பரவியது

கட்டாயம் படிக்கவும்  அனைவர் முன்னிலையில் அம்மா காலில் விழுந்து ஆசி வாங்கிய நடிகை அதிதி சங்கர்

அப்பாவை பத்தி பொய்யான  செய்தி பரப்பாதீங்க...வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்ரம் மகன் துருவ் விக்ரம் 2

விளம்பரம்

தற்போது விக்ரம் மகன் நடிகர் துருவ் விக்ரம்,அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,அப்பாவுக்கு லேசான நெஞ்சு வலி தான்,அவருக்கு மாரடைப்பு என தவறான செய்திகள் வெளியாவது மிகுந்த வேதனை அளிக்கும் விதமாக உள்ளது.சீயான் தற்போது நலமாக உள்ளார்,அவர் இன்னும் ஓரிரண்டு நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ச் ஆகிவிடுவார்,நிச்சயம் இந்த அறிக்கை பொய்யான வதந்திகளுக்கு ஓய்வுகொடுக்கும் என நம்புவதாக அறிவித்துள்ளார்.தற்போது சீயான் ரசிகர்கள் சிறிது மகிழ்ச்சியடைந்துள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  ஷூட்டிங்கில் அடித்துக்கொண்டு விளையாடும் வெற்றி மற்றும் அபி

அப்பாவை பத்தி பொய்யான  செய்தி பரப்பாதீங்க...வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்ரம் மகன் துருவ் விக்ரம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment