இயக்கங்களுக்கும் கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரிந்து கொள்வோம் வாங்க…

“நீங்கள் அரசியலில் ஈடுபடவில்லையென்றால் உங்கள் வாழ்வில் அரசியல் தலையிடும்” ,
“இந்த அரசியலைப் பற்றி பேசாதீர்கள் , அதையெல்லாம் மாற்ற முடியாது என்று சொல்பவனிடம் ஒரு அரசியல் இருக்கிறது, அது அரசியலை நோக்கி வருபவனை தடுக்கும் அரசியல்”. இந்த கூற்றுகள் ரஷ்ய புரட்சியாளர் தோழர் லெனின் சொன்னது. சமகாலத்தில் எல்லோருக்கும் அரசியல் அறிவு தேவை, சமூக அறிவியலோடு கூடிய அரசியலால் மட்டுமே மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்கிற திரைப்பட வரிகள் மெட்ராஸ் படத்தில் இருக்கும்.அரசியல் கட்சி என்று கேள்வி எழுப்பப்படும் போது, அது ஊழல் இல்லாமல் இருக்க வேண்டும் , அதன் தலைவர் ஒழுக்கமானவராக இருக்க வேண்டும், நேர்மையானவராக இருக்க வேண்டும், சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும், என சில பல பதில்கள் வரும். ஆனால் இது மட்டுமே அரசியலை தீர்மானிக்கும் காரணிகள் அல்ல. அதைத் தாண்டி மக்கள் செல்வாக்கு இருக்க வேண்டும். மக்களே இறுதி எஜமானர்கள்.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக WORK OUT செய்து அனைவரையும் அதிர்ச்சியாக்கிய BIGGBOSS ஷிவானி

இயக்கங்களுக்கும் கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரிந்து கொள்வோம் வாங்க... 1

விளம்பரம்

அரசியலை பொறுத்தவரை இரண்டு விதமாக பிரிக்கலாம்.
1. அமைப்புக்கள்/இயக்கங்கள்
2. கட்சிகள் – தேர்தல் அரசியல். இதில் முதலாவது வகை அரசியலானது, தேர்தலில் ஈடுபடாமல் அரசியல் செய்வது.
இந்த இயக்கங்கள் சமூகத்தின் மீதான அக்கறை காரணமாக போராட்டங்களில் ஈடுபடுவது, அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்பது, ஒரு கட்சியை தேர்தலில் ஆதரிப்பது போன்ற பணிகளை செய்யும். அதாவது தேர்தலில் பங்கெடுக்காமல் மறைமுக அரசியலில் ஈடுபடும்.இரண்டாவது வகை தேர்தல் அரசியல். நேரடியாக தேர்தலில் நின்று வெற்றி பெற்று அதிகாரத்திற்க்கு வருவது. இந்த அரசியலே பெரும்பாலான கட்சிகள் பின்பற்றுகின்றன.
கட்சி தொடங்கும் ஒவ்வொருவரும் தேர்தல் நின்று வெற்றி பெற்று அதிகாரத்தை அடைவதையே விரும்புகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கொஞ்சும் தமிழில் கொஞ்சி கொஞ்சி பேசிய க்ரீத்தி ஷெட்டி ...செம்ம CUTE

இயக்கங்களுக்கும் கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரிந்து கொள்வோம் வாங்க... 2

விளம்பரம்

தமிழகத்தை பொறுத்தவரை திராவிட அரசியலையே மக்கள் விரும்புகின்றனர். இரு துருவ அரசியலாக திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சியில் இருக்கின்றன. 1967ல் முதன்முறையாக அண்ணா ஆட்சியைப் பிடித்தார். பின்னர் அவர் மறைவுக்குப்பின் 1969ல் கருணாநிதி ஆட்சியைப் பிடித்தார். அதன் பிறகு எம்ஜிஆர் ஜெயலலிதா என திமுக அதிமுக வே மாறி மாறி ஆட்சியில் அமர்ந்தன. 50 ஆண்டு காலம் இந்த தமிழகத்தை திராவிட அரசியலே தீர்மானித்தன. பல குறைபாடுகள் இருப்பினும் தமிழகம் முன்னோடி மாநிலமாகவே திகழ்கின்றது.
ஊழல், மணல் கொள்ளை, நதி நீர் பங்கீடு, கந்து வட்டி கலாச்சாரம், வேலையின்மை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூக அவலங்கள் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளது. பல மாநிலங்களின் கூட்டமைப்பே மத்திய அரசு. ஆனால் மத்தியில் ஆள்பவர்கள் மாநிலங்களை சரிவர நடத்துவது இல்லை. போதுமான நிதி ஒதுக்கவதில்லை, வேலை வாய்ப்பை ஏற்ப்படுத்துவதற்க்கு எந்த நடவடிக்கையும் இல்லை. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் இல்லை. தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளை தீர்க்காமல் சட்ட திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாக தற்போதைய அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் திராவிட அரசியலை தாண்டி தமிழ் தேசிய அரசியல் பெரிதும் இளைஞர்களால் கவனிக்கப்படுகிறது. சீமான் போன்ற தலைவர்கள் தமிழ் தேசிய தலைவர்களாக பார்க்கப்படுகின்றனர். இந்த நாட்டிற்க்காக பெரிதும் உழைக்கிறார்கள், அரசுக்கு எதிரான அனைத்து போராட்டங்களையும் முன்னெடுக்கிறார்கள். கூட்டணியின்றி தொடர்ந்து தேர்தலில் நின்று வருகிறார்கள். வருங்காலத்தில் மூன்றாவது மிகப்பெரிய சக்தியாக திகழ்வார்கள் என நம்பப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment