காதல் மன்னன் என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் அஜித்.1993 ஆம் ஆண்டு அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் தல அஜித்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வரிசையாக நடித்து வந்தார்.இவர் நடித்த காதல் கோட்டை திரைப்படம் இவரின் சினிமா வாழ்வுக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படம் பெரும் விமர்சையாக வெற்றிபெற்று அஜித்குமாரை தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காட்டியது.பல தோல்விகள் வந்தாலும் தொடர்ந்து படம் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் அஜித்.வரிசையாக தோல்விகளை கண்ட பொழுது அஜித் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தவர்கள் மத்தியில் மீண்டும் எழுந்து வந்து பட்டையை கிளப்பினார்.
நடிப்பில் மட்டுமில்லாமல் கார் ரேஸ்.பைக் ரேஸ் ,துப்பாக்கி சுடுதல் என பலவிதமான வித்தைகளை கற்றுக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுவருகிறார்.தற்போது இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்து நடித்துள்ளார்.இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.இப்படத்துடன் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு படமும் வெளி வர இருப்பதால் யார் படம் வெற்றிபெற போகிறது என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.இதற்கிடையில் வாரிசு பட தயாரிப்பாளர் அஜித் விஜய்க்கு கீழே தான்,விஜய் நம்பர் 1 நடிகர் எனவே அதிக திரையரங்குகளை தரவேண்டும் என கூறியிருந்தார்
இது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.இந்நிலையில் தற்போது துணிவு படத்தின் தெலுங்கு டப்பிங் ஆன தெகிம்பு படத்தினை ஆந்திராவில் வைசாக் மற்றும் நிஜாம் ஆகிய பகுதிகளில் அஜித்தை பற்றி ப்பேசிய தில் ராஜு வெளியிடுகிறார்.இதுகுறித்து அறிந்த ரசிகர்கள் இப்போ தெரியுதா தல அஜித் என்றால் யார் என்று,என கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.