சினிமாவில் நூறு ரூபாய்க்காக உயிரை விட்டார் கருப்பு சுப்பையா – இயக்குனர் மனோபாலா பேட்டி

சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் ரசிப்பது முக்கிய நகைச்சுவை கதாபாத்திரங்களை மட்டுமே அவர்களிடம் அடி வாங்கி உதை வாங்கி மக்களை சிரிக்க வைக்கும் நடிகர்களை யாருமே ரசிப்பதில்லை.அப்படி 80 மற்றும் 90 களில் பிரபலமான நகைச்சுவை நடிகர் கருப்பு சுப்பையா,இவர் கவுண்டமணியின் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்துள்ளார்.சுமார் 80 படங்கள் இவர் கவுண்டமணியுடன் சேர்ந்து நடித்துள்ளார்.ஆரம்பத்தில் சிறு சிறு காட்சிகளில் மட்டும் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் முழு நீளமாக காமெடியன்கள் உடன் பணியாற்ற தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

சினிமாவில் நூறு ரூபாய்க்காக உயிரை விட்டார் கருப்பு சுப்பையா - இயக்குனர் மனோபாலா பேட்டி 1

விளம்பரம்

இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகிய பெரிய மருது படத்தில் கவுண்டமணியும் செந்திலும் ஈயம் பூசுபவர்களாக நடிப்பார்கள்.இவர்களிடம் ஈயம் பூச வந்து பாத்திரம் அடகு கடையில் உள்ளது வந்த உடனே கண்டிப்பாக உன்னிடம் தான் ஈயம் பூசுவேன் என கவுண்டமணியை பார்த்து கூறுவார் கருப்பு சுப்பையா,இது ரசிகர்களை இன்று வரை வயிறுகுலுங்க சிரிக்க வைத்து வருகிறது.இந்நிலையில் கடுப்பாகிய கவுண்டமணி உடனே அவருக்கு உடல் முழுவதும் ஈயம் பூசிவிடுவார். இந்த நகைச்சுவை காட்சி பெரும் பிரபலமாகியது.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் CWC மணிமேகலை ரம்ஜான் கொண்டாட்டம்

சினிமாவில் நூறு ரூபாய்க்காக உயிரை விட்டார் கருப்பு சுப்பையா - இயக்குனர் மனோபாலா பேட்டி 2

விளம்பரம்

தற்போது இதுகுறித்து இயக்குனர் மனோபாலா அளித்த பேட்டி ஒன்றில், கருப்பு சுப்பையா இந்த காட்சியில் 100 ரூபாய் சம்பளத்திற்கு நடித்தார் எனவும்,உடல் முழுவதும் பெயிண்ட் அடித்துள்ளார்.இந்த பெயிண்ட் உடலுக்குள் சென்று அவர் அடுத்த நாளே இறந்துவிட்டார் என மனோபாலா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.இந்த பதிவு ரசிகர்களை பெருமளவு கலங்க செய்துள்ளது என்றே கூறலாம்.இருப்பினும் ஒருசில ரசிகர்கள் இது உண்மையில்லை அவர் நோய்வாய்ப்பட்டு தான்  இறந்தார் என  கூறி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment