The Indian Times

ஷோபாவை பலமுறை அடித்து இருக்கிறேன்…மனம் திறந்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்

1980,1990 களில் பிரபல இயக்குனராக தமிழ் சினிமாவை வலம் வந்தவர் இயக்குனர் SA சந்திரசேகர்.இவர் 1981 ஆம் ஆண்டு விஜய்காந்த்தினை வைத்து சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற அந்தசத்தினை அடைந்தார் இவர்.இப்படதினை தொடர்ந்து பல தமிழ் படங்களை இயக்கினார் மேலும் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் ஒரு படத்தினை இயக்கியுள்ளார்

Advertisement

இவர்.இவருக்கு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை.பெண் குழந்தை சிறுவயதிலேயே இறந்தது.அந்த சோகத்தில் இருந்து இவர்கள் குடும்பம் மீள்வதற்கே பல ஆண்டுகள் ஆகியது.சரி பையனையாவது பெரிய ஆள் ஆக்க வேண்டும் என போராடினார் சந்திரசேகர்.சினிமா உலகிற்கு ஆண் குழந்தையை மட்டும் அறிமுகப்படுத்தி இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் முன்னணி நடிகராக உருவாக்கியுள்ளார் SA சந்திரசேகர்.இவர் வேறுயாருமில்லை தளபதி விஜய் தான்.அப்பாவாக அவர் கூடவே இருந்து சினிமாவில் நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து அவரை இந்த அளவு வளர்த்துள்ளார்.

Advertisement

அண்மையில் இவர் பிறந்தநாள் விழாவில் விஜய் குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை.மனைவியுடன் தனியாக தனது பிறந்தநாளை கொண்டாடினார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது மேலும் விஜய் மீது விமர்சனமும் அதிகம் செய்யப்பட்டது.இயக்குனர் சந்திரசேகர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது,எனது திருமணத்திற்கு அம்மா,அண்ணன் எல்லாரும் வந்தார்கள் எனது அப்பா வரவில்லை,நடிகர் திலகம் சிவாஜி அண்ணனின் மனைவி கமலாம்மாள் தாலி எடுத்து கொடுக்க நான் ஷோபா கழுத்தில் கட்டினேன்,நான் முரட்டு தனமாக இருப்பேன்,அதிகம் கோவம் வரும் ஆனால் நான் எப்படி பட்டவன் என்பது என் மனைவி ஷோபாவுக்கு தான் தெரியும்.நான் பலமுறை ஷோபாவை அடித்திருக்கிறேன்,அவர் இடத்தில வேறு யாராவது இருந்திருந்தால் நிச்சயம் என்னை விட்டு சென்றிருப்பார்,ஆனால் ஷோபா அப்படி இல்லை,அவள் இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் அவள் இல்லை ,அவளை அடித்தாலும் நான் அவளிடம் மன்னிப்பு கேட்பேன் அவள் என்னை புதிய காதலனாக ஏற்றுக்கொள்வார் என மனம் நெகிழ்ந்த்து பேசியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in