The Indian Times

ஒன்னும் இல்லாம சுத்திட்டு இருந்த என்ன இயக்குனர் ஆக்கியது இவர்கள்தான்: செல்வராகவன் பகீரங்க பேட்டி

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன்.இவர் இயக்கும் திரைப்படத்திற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவரது ஆயிரத்தில் ஒருவன் படம் மற்றும் புதுப்பேட்டை படம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.இவர் முதன் முதலில் இயக்கிய படம் காதல் கொண்டேன்.தனுஷ் நடிப்பில் உருவாகிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இவர் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் நானே வருவேன் என இரண்டு படங்களை நடிகர் தனுஷ் வைத்து இயக்கி வருகிறார்.

Advertisement

இயக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது நடிகராகவும் களம் இறங்கி இருக்கிறார் செல்வராகவன்.பீஸ்ட் படத்தில் நடிகர் செல்வராகவனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தற்போது இவர் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சாணிக்காயிதம்.இப்படம் நேரிடையாக மே 6 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.இப்படம் குறித்து சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்ட செல்வராகவனிடம் தொகுப்பாளர் ,நீங்க நடிப்பீங்களா இல்லை இயக்குவீங்களா என கேள்வி கேட்டதற்கு பதிலளித்த செல்வராகவன்,எல்லாமே மக்கள் அளிக்கும் தீர்ப்புதான்,ஒன்னுமே இல்லாத பொழுது என்னை இயக்குனர் ஆக்கியது மக்கள்,தற்போது நடித்துள்ளேன் இதற்கும் அவர்கள் ஆதரவளிப்பார்கள் என தெரிவித்துள்ளார்

Advertisement

Video courtesy: indiaglitz

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in