இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் திரைப்படம் சாணிக்காயிதம்.இப்படத்தில் இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார்.இப்படம் திரையில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது இப்படம் மே 6 ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரிடையாக வெளியாக உள்ளது.1980 களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையாக கொண்டு இப்படம் கிரைம் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இப்படத்தின் ட்ரைலரை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது,இப்படத்தின் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில்,இப்படத்தின் ட்ரைலரை பார்த்த வீரமே வாகை சூடும் படம் இயக்குனர் து.பா.சரவணன் தனது ட்வீட்டர் பக்கத்தில் யபா…என்ன சார் இப்படி பண்ணி வச்சிருக்கிங்க என கேள்வி எழுப்பி பாராட்டியுள்ளார்.
இவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் லைக்குகள் கொடுத்து வருகின்றனர்.இருப்பினும் சிலர் எந்த முறையில் இவர் கேட்டுள்ளார் ட்ரைலர் நன்றாக இல்லை என்ற காரணத்தினால் என்ன சார் இப்படி பண்ணி வச்சிருக்கிங்க என்று கேட்டுள்ளாரோ என்று குழம்பி போய் உள்ளனர் .தற்போது ட்ரைலர் அனைவரின் பாராட்டையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
யபா…. என்ன சார் இப்டி பண்ணி வச்சிரு்க்கிங்க 🔥🔥🔥❤️❤️ https://t.co/iqgPx3CuQh
— Thu Pa Saravanan (@Thupasaravanan1) April 26, 2022
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in