நேற்று முன்தினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள களிமேடு கிராமத்தில் 94ஆம் ஆண்டு அப்பர் குருபூஜை விழா பெரும் விமர்சையாக நடைபெற்றது.இந்த விழாவில் சப்பர உலா நிகழ்ச்சி நடைபெற்றது.சப்பர ஊர்வலம் முடிந்து திரும்பும்பொழுது அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் சப்பரம் உரசியதால் அதன் மீது மின்சாரம் பாய்ந்தது.இதில் அங்கிருந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தமிழக முதல்வர்,பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் ஆகியோர்கள் இந்த நிகழ்விற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவியை அறிவித்துள்ளது.தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று இறந்தவர்கள் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.
தேர்விபத்தில் தேர் தீ பற்றி எறியவும் அதனை கண்டு மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்,மேலும் ஊரவலத்தில் நடந்து வருபவர்களுக்கா க சாலையில் தண்ணீர் ஊற்றப்பட்டது.அந்த தண்ணீரிலும் மின்சாரம் பாய்ந்துள்ளது.மக்களின் அலறல் சத்தம் கேட்ட உடன் வீட்டில் இருந்த மின் வாரிய ஊழியர் திருஞானம் தண்ணீரில் மின்சாரம் வருவதையும் பொருட்படுத்தாமல் அதனை மிதித்து சென்று சிலரை காப்பாற்றியுள்ளார் மேலும் சக ஊழியர்களுக்கு தகவல் அளித்து சம்பவம் குறித்து தெரியப்படுத்தினார்.இதனால் உயர் அதிகாரிகள் தஞ்சையில் இருந்து களிமேட்டிற்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்தனர்.அவரது துரித நடவடிக்கையால் 200கும் அதிகமானவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.மின்சாரத்தினால் பாதித்த அவரும் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in