திடீரென சாலைக்கு நடுவே ஓடிய யானை – பாராட்டும் நெட்டிசன்கள் | வைரல் வீடியோ

பொதுவாக விலகுங்கள் என்றால் அது மிருகத்தனமாக பல செயல்களை செய்யும். அதிலும் குறிப்பாக பல விலங்குகள் மனிதனை வேட்டையாடி உண்ணும் என்றும் பல கதைகளில் நாம் கேட்டு இருப்போம். அந்த அளவுக்கு விலங்குகள் இரக்கமற்றவை என்று கதைகள் பலவற்றில் சித்தரித்து இருப்பதை நம்மால் தவிர்க்க முடியாது.

அனால் தற்போது எடுக்கப்படும் படங்களில் விலங்குகள் மனிதனை விட அதிக மனிதத்தன்மை இயற்கையாகவே உள்ளது என்று காண்பித்து வருகின்றனர். தமிழ் பிரபல இயக்குநர் ராமநாராயணனின் படங்களில் விலங்குகள் மனிதருக்கு உதவும் வகையில் பல காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கும். மேலும் ஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் விலங்கு மற்றும் மனிதர்கள் இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.

விளம்பரம்

திடீரென சாலைக்கு நடுவே ஓடிய யானை - பாராட்டும் நெட்டிசன்கள் | வைரல் வீடியோ 1

இது போன்று நிஜ வாழ்க்கையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அது அனைவரின் மனதையும் வெகுவாக கவர்ந்துள்ளது. ஆம் இங்கு ஒரு யானை செய்யும் செயல் அனைத்து மனிதர்களின் மனதிலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் யானையின் உரிமையாளர் யானையை ஒரு சாலை வழியாக யானையை அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு நாய் இறந்து போய் சாலையில் கிடந்தது. அதை பார்த்த யானை அதனை மிதிக்காமல் ஓரமாக சென்று அப்றம் அந்த உரிமையாளர் கூட நடக்க தொடங்கியது. ஆனால் அங்கு சென்ற வாகனங்கள் பல அந்த நாயின் மீது தங்கள் வாகனங்களை ஏற்றி தான் சென்றனர்.
இதையடுத்து அந்த யானையை மனித நேயம் உள்ள யானை என்று பலர் பாராட்டி வருகின்றனர். இப்படி விலங்குகளிடம் இருந்து மனிதர் பலர் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment