எதற்கும் துணிந்தவன் படத்தை ரிலீஸ் பண்ணிடுவீயா நீ?.. எச்சரிக்கை விடுத்த பாமக | Etharkkum Thuninthavan

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்குநர் பாண்டியராஜன் இயக்குகிறார். இந்த படம் பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த படம் வருகின்ற மார்ச் 10ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. மீண்டும் சூர்யா மற்றும் பாமகவினர் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டி இந்த TTF வாசன்...கைது செய்ய கோரி இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு

எதற்கும் துணிந்தவன் படத்தை ரிலீஸ் பண்ணிடுவீயா நீ?.. எச்சரிக்கை விடுத்த பாமக | Etharkkum Thuninthavan 1

விளம்பரம்

கடலூரைச் சேர்ந்த பாமகவினரும், வன்னியர் கூட்டமைப்பும் கடலூரில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்தை திரையிடக்கூடாது என பாமக சார்பில் கடிதம் அனுப்பபட்டுள்ளது. சூர்யா மற்றும் பாமவிற்கு நடுவில் ஏற்கனவே ஜெய்பீம் பட சர்ச்சை நிலவி வருகிறது. காவல்நிலையத்தில் வைத்து லாக்அப் மரணம் செய்த காவலராக வன்னியர் சித்தரிக்கப்பட்டு இருந்ததாகவும், அவரது வீட்டில் வன்னியர்களின் சின்னமான அக்னி குண்ட காலண்டர் இருந்ததாகவும் சர்ச்சை கிளம்பியது. பாமகவின் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிடவே விவகாரம் பூதாகரமானது. சூர்யா விளக்கம் கொடுத்து அறிக்கைகள் கொடுத்தார். இரு பக்கமும் காரசார விமர்சனங்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து அந்த காட்சியில் காலண்டரில் லெட்சுமி படம் மாற்றப்பட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. Youtube Video Code Embed Credits: IndiaGlitz

கட்டாயம் படிக்கவும்  இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டி இந்த TTF வாசன்...கைது செய்ய கோரி இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு

எதற்கும் துணிந்தவன் படத்தை ரிலீஸ் பண்ணிடுவீயா நீ?.. எச்சரிக்கை விடுத்த பாமக | Etharkkum Thuninthavan 2

விளம்பரம்

ஆனாலும் சூர்யாவுக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. அவரின் படங்கள் வெளியாகும் தியேட்டர்களுக்கும் மிரட்டல் விடப்படன. தமிழ்நாட்டில் எங்கும் அவரது படங்கள் வெளியாக விட மாட்டோம் என சூளுரை எடுத்தனர். ஆனால் அனைத்தையும் கடந்து சூர்யா நிலைமையை சிறப்பாக கையாண்டார். தற்போது எதற்கும் துணிந்தவன் படத்திற்கு புது சிக்கல் உருவாகியுள்ளது. கடலூர் பாமக மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் விஜயவர்மன் இந்த மாவடத்தில் எங்கும் படம் திரையிடக்கூடாது என எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the video below..

கட்டாயம் படிக்கவும்  இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டி இந்த TTF வாசன்...கைது செய்ய கோரி இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment