The Indian Times

ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல ஒரு படம் வந்துருக்கு…| GARGI BLUESATTAI MARAN REVIEW

சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக சினிமா உலகை வலம் வருபவர் சாய் பல்லவி.இவர் முதன் முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.இவர் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்.பின்னர் நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு ப்ரேமம் எனும் மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் .இவர் நடிப்பில் தற்போது கார்கி படம் வெளியாகியுள்ளது.ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த கதையினை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார் சாய் பல்லவி. இப்படத்தினை இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார்.இப்படத்தினை ஜகமே தந்திரம் படத்தில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி தயாரித்துள்ளார்.இப்படத்தில் சாய் பல்லவி உடன் நடிகர் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியாகி உள்ளது.அனைத்து மொழிகளிலுமே நடிகை சாய் பல்லவியை சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார்

Advertisement

தற்போது இந்த படத்தினை திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.புது படம் வெளியானால் பலரும் இவரது விமர்சனத்தினை முதலில் பார்த்துவிட்டுத்தான் படத்தினை பார்ப்பதை பற்றி யோசிப்பர்,அந்தளவிற்கு விமர்சனத்தில் மிக பெரிய ஆளாக உள்ளார்.இந்த வீடியோவில் இவர் கூறியதாவது,இது ஒரு CHILD ABUSE கதை ,இது பிற படங்களில் இருந்தால் அவர்கள் குற்றவாளி யார் என்பதை தேடும் பொழுது எந்த பரபரப்பும் இல்லாமல் நாம் நமக்கு என்ன என்று இருப்போம்,ஆனால் இந்த படத்தில் நமக்கும் பரபரப்பு ஏற்பட்டு விடுகிறது.இதுதான் இந்த படத்தின் வெற்றி.இந்த படத்தில் வரும் எல்லா காதாபாத்திரத்தினையும் நாமே சந்தேகப்படும் அளவிற்கு அமைந்துள்ளது.படத்துல நடிப்பு தனியா தெரியும்,கேமிரா தனியா தெரியும்,மியூசிக் தனியாதெரியும் ஆனா இந்த படத்துல எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்துள்ளது படத்திற்கு வெற்றியை அளித்துள்ளது.படத்தில் வசனம் நன்றாக இருந்தது.கோர்டுக்குள் நடக்கும் காட்சிகள் வசனங்கள் ல்லாம் அற்புதம்.இறுதி காட்சிகளில் சரியான கருத்துக்களை சொல்லியுள்ளனர்.ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல படம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Embed video credits : TAMIL TALKIES 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in