கிறிஸ் கெயிலின் மூன் வாக்! viral video

உலகிலேயே சிறந்த டி 20 தொடர் என்றால் அது ஐ.பி.எல் தொடர் தான். நாளை ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாக இருக்கிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது. இந்நிலையில் அணைத்து வீரர்களும் ஐ.பி.எல் தொடருக்காக பயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவளின் காரணமாக அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தபட்டுள்ளனர். கடந்த 2020 ஐ.பி.எல் தொடர் துபாயில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது.

கிறிஸ் கெயிலின் மூன் வாக்! viral video 1

விளம்பரம்

இதனால் கடந்த 2014 க்கு பிறகு தற்போது ஐ.பி.எல் தொடரின் மதிப்பு சரிந்துள்ளது என்று கூறப்படுகிறது. ஐ.பி.எல் லை திருவிழா போல் ரசித்து பார்த்து கொண்டிருந்த சமயத்தில் கொரோனா தோற்று பாதிப்பால் ஐ.பி.எல் தொடருக்கு இந்தியாவில் தடை விதிக்க செய்தது. பின்னர் ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடியாக காணப்படும் மைதானங்களை பார்க்கும்போது ரசிகர்களை மிகவும் சோகத்திற்குள்ளாகக்கியது.

கிறிஸ் கெயிலின் மூன் வாக்! viral video 2

விளம்பரம்

தற்போது 2021 ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் நடைபெற போகிறது என்றாலும் ஆரம்பத்தில் சில போட்டிகளுக்கு ரசிகர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது என்று பல கட்டுப்பாடுகளுடனே நடக்க இருக்கிறது.  அதில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சேர்ந்த கிறிஸ் கெய்ல் மூன் வாக் செய்து வெளியிட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐ.பி.எல் தொடரில் கிறிஸ் கெய்ல் முதலில் பெங்களூரு அணியில் இருந்தார்.

விளம்பரம்

சமீபத்தில் தான் பெங்களுருவில் இருந்து பஞ்சாப் அணிக்கு மாற்றப்பட்டார். இதுவரை இவர் ஐ.பி.எல். தொடர்களில் 132 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார். அதில் 4000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார் கிறிஸ் கெய்ல். அந்த வகையில் தற்போது நடக்க இருக்கும் ஐ.பி.எல் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டு வரும் கிறிஸ் கெய்ல் தனது ரூமில் மூன் வாக் நடனமாடி வீடியோ பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment