The Indian Times

140கிமீ வேகத்தில் TTF பைக்கில் சென்று கத்தி கதறி அழுத GB முத்து

தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்தவர் ஜிபி முத்து.சாதாரண மரக்கடை வைத்து வாழ்க்கையை ஒட்டி வந்தவர் இவர். விளையாட்டு தனமாக டிக் டாக்கில் வீடியோ போடா தொடங்கவே அதுவே இவருக்கு வாழ்க்கை என்று மாறியது.தொடர்ந்து டிக் டாக்கில் நடனம் ஆடி வீடியோ பதிவிட்டு வைரலாகி வந்தார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாக்கியது.இந்நிலையில் திடிரென டிக் டாக்கினை தடை செய்யவே செய்வதறியாது இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த செய்தி வெளியாகி அனைவரிடமும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்பின் இவர் யூடியூப் சேனல் தொடங்கி,அதில் ரசிகர்கள் இவருக்கு அனுப்பும் கடிதங்களை நகைச்சுவையாக படித்து பிறரை சிரிக்க வைத்து பெரும் அளவில் வரவேற்பினை பெற்றார்.தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என மிகவும் பிரபலமாகி நடிக்க தொடங்கிவிட்டார் ஜிபி முத்து.தற்போது இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் பம்பர் படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.தற்போது ஜிபி முத்து யுடியூபர் டிடிஎப் வாசனை நேரில் சந்தித்துள்ளார்.

Advertisement

அப்பொழுது வாசன் ஜிபி முத்துவை பைக்கில் அழைத்து சென்றுள்ளார்.ரோட்டில் 140 கிமீ வேகத்தில் சென்றுள்ளார்.இதனால் வேகம் தாங்காமல் ஜிபி முத்து கத்தி கதறியுள்ளார்.இந்த வீடியோவை டிடிஎப் வாசன் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோ பெரும் சிரிப்பலையை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோ தற்போது பெருமளவு வைரலாகி வருகிறது

Embed video credits : TWIN THROTTLERS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in