இந்தாங்க தங்கம் வச்சிக்கோங்க..திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தங்கம் வெள்ளி அள்ளி கொடுத்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா

சினிமா உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது..பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.நானும் ரவுடி தான் படத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாராவை கதாநாயகியாக வைத்து இயக்கிய நிலையில்,இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு ஆனது நாளடைவில் காதலாக மாறியது.இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகத்தினை வலம் வந்தனர்.இவர்களது திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது என கூறி விக்னேஷ் சிவன் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கல்யாணம் ஜூன் 9 ஆம் தேதி நடப்பதினை உறுதி செய்தார்.இந்த செய்தியை கேட்ட இவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்,

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சூரி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

இந்தாங்க தங்கம் வச்சிக்கோங்க..திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தங்கம் வெள்ளி அள்ளி கொடுத்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா 1

விளம்பரம்

விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளனர்.
இவர்களது திருமணம் திருப்பதியில் நடக்கும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு திருமணம் சென்னை மகாபலிபுரம் அருகே sheration grand விடுதியில் மிகவும் நெருங்கிய உறவினர்களுடன் மட்டுமே நடைபெற்றது.மேலும் இவர்களது திருமணம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.சூர்யா,கார்த்தி,அட்லீ ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பல திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை ஆசீர்வாதம் செய்தனர்.பாதுகாப்பிற்காக 80 பவுன்சர்கள் மற்றும் போலீஸ்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.மேலும் பத்திரிகைகளில் உள்ள கியூ ஆர் கோடுகள் மூலம் தான் அனைவரையும் உள்ளே அனுமதித்தனர்.

கட்டாயம் படிக்கவும்  சித்துவுடன் கடற்கரையில் ரொமென்ஸ் செய்யும் ஷ்ரேயா

இந்தாங்க தங்கம் வச்சிக்கோங்க..திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தங்கம் வெள்ளி அள்ளி கொடுத்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா 2

விளம்பரம்

இவர்களின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.குடிநீர் பாட்டில்களில் இவர்களது புகைப்படம்,பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கு,சைவ உணவுகளில் பல வகைகள் என திருமணம் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.இந்த திருமண வீடியோ விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது,அதானல் தான் திருமணத்திற்கு வருபவர்களுக்கு செல்போன்கள் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சில திருமண புகைப்படங்களை மட்டுமே விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி தனக்கு திருமணம் நடந்ததையும் காதலியை கரம் பிடித்ததையும் நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருந்தார்.இவர்களது திருமணத்தில் முக்கிய கோவில்களை சேர்ந்த 20 சிவாச்சாரியார்கள் மந்திரம் சொல்ல 10:20க்கு நயன்தாரா கழுத்தில் தாலியை காட்டியுள்ளார் விக்னேஷ் சிவன்

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் நாயகி உயிர் தோழிகளுடன் பிறந்தநாளை கொண்டாட்டம்

இந்தாங்க தங்கம் வச்சிக்கோங்க..திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தங்கம் வெள்ளி அள்ளி கொடுத்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா 3

விளம்பரம்

இவர்களது திருமணத்தில் கலந்துகொள்ள 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் கல்யாணத்தில் கலந்துகொள்பவர்களுக்கு தேங்காய் மற்றும் பழம் வழங்குவது இயல்பு ஆனால் இவர்களது திருமணத்தில் வந்தவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றினை பரிசாக வழங்கியுள்ளனர்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.பலரும் இதனை கேள்விப்பட்டு ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

இந்தாங்க தங்கம் வச்சிக்கோங்க..திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தங்கம் வெள்ளி அள்ளி கொடுத்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment