The Indian Times

BIGG BOSS வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் GP முத்து போட்ட முதல் பதிவு

தமிழகத்தில் தற்போது ஜிபி முத்துவை தெரியாதவர்கள் யாரும் இல்லை அந்தளவிற்கு மக்களிடம் பிரபலமாகிவிட்டார் .டிக் டாக்கில் நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டு வந்தவர் ஜிபி முத்து, நாளடைவில் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்து பெரும் வரவேற்பினை பெற்றார் ஜிபி முத்து. தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். பம்பர் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Advertisement

இந்நிலையில் ஜிபி முத்துவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரியவாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டார் .இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்ட பிறகு இவருக்கு வரவேற்பு மக்களிடம் இரட்டிப்பாகியது.இவரை டைட்டில் வின்னராக்க மக்களும் முடிவு செய்துவிட்டனர். மேலும் நூறு நாட்கள் ஜிபி முத்து நம்மளை மகிழ்விப்பார் என ஆவலாக இருந்தனர்

Advertisement

இந்நிலையில் குடும்பத்தினை பிரிந்து இருக்க முடியாது,எனக்கு வீட்டுக்கு போனும் என் மகனை பாக்கணும் என்னால இங்க இருக்க முடியாது என்று கூறவே கமல் அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிக்கொண்டு வந்தார்.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.வீட்டை விட்டு வெளியே வந்த உடனே தனது மகனுடன் இணைந்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in