The Indian Times

BIGG BOSS வீட்டை விட்டு வெளியேறிய GP முத்து.. சோகத்தில் ரசிகர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்தவர் ஜிபி முத்து.சாதாரண மரக்கடை வைத்து வாழ்க்கையை ஒட்டி வந்தவர் இவர். விளையாட்டு தனமாக டிக் டாக்கில் வீடியோ போடா தொடங்கவே அதுவே இவருக்கு வாழ்க்கை என்று மாறியது.தொடர்ந்து டிக் டாக்கில் நடனம் ஆடி வீடியோ பதிவிட்டு வைரலாகி வந்தார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாக்கியது.இந்நிலையில் திடிரென டிக் டாக்கினை தடை செய்யவே செய்வதறியாது இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த செய்தி வெளியாகி அனைவரிடமும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.

Advertisement

அதன்பின் இவர் யூடியூப் சேனல் தொடங்கி,அதில் ரசிகர்கள் இவருக்கு அனுப்பும் கடிதங்களை நகைச்சுவையாக படித்து பிறரை சிரிக்க வைத்து பெரும் அளவில் வரவேற்பினை பெற்றார்.தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என மிகவும் பிரபலமாகி நடிக்க தொடங்கிவிட்டார்.தற்போது பிரபலமான ஜிபி முத்துவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.அதன்படி இன்று ஆரம்பமாகி இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஆளாக வீட்டுக்குள் சென்றுள்ளார்

இந்த வாரம் வீட்டின் தலைவர் ஆகவும் வெற்றிபெற்றுள்ளார் ஜிபி முத்து.இருந்தாலும் அவருக்கு அவரது குடும்பத்தின் நினைப்பு வந்ததால் அவரை வெளியே விடும்படி கோரிக்கை வைத்து வந்தார் மேலும் மன அழுத்தமாக இருப்பதாகவும் தன்னால் சாப்பிட முடியவில்லை எனவே என்னை வெளியே அனுப்பும்படி கேட்டுக்கொண்டிருந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் ஜிபி முத்து.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in