The Indian Times

வாங்க மாஸ்ட்ரோ..மியூசிக் கம்போஸ் பண்ணலாம்..இளையராஜாவை அழைத்த ஏ.ஆர்.ரகுமான் | Ilaiya Raja

இசைத்துறையில் தவிர்க்க முடியாத இரண்டு சக்திகள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான். 80,90களில் தனி ஒரு ஆளாக நின்று கொடிகட்டி பறந்தவர் இளையராஜா. வாழ்க்கையில் இன்பம், துன்பம், துக்கம், அழுகை, சிரிப்பு என எல்லாவற்றிற்கும் தனது இசையால் மருந்திட்டவர். இவரது பாடல்களை கேட்டு காதல் வாழ்க்கையை ஓட்டியவர்கள் பலர் உண்டு. பலரை காதலிக்க தூண்டியதும் இவரின் இசை ஒரு காரணம் எனலாம். பல புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்து பலரை இசை துறையில் கரை சேர்த்தவர். இவரை ரசிகர்கள் மாஸ்ட்ரோ இசைஞானி என்றெல்லாம் செல்லமாக அழைப்பது உண்டு.

Advertisement

இவரிடம் கீபோர்டு வாசித்துக் கொண்டிருந்தவர்தான் ஏ.ஆர்.ரகுமான். பின்னர் ரகுமான் தன் சொந்த முயற்சியால் இசைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். பின்னர் 2000த்தில் தொடங்கி இன்று வரை தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறார். உலக அரங்கில் ஆஸ்கார் விருதை பெற்று தமிழகத்தை பெருமை கொள்ள செய்தார். மெல்லிசையில் ஏ.ஆர்.ரகுமானை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்னும் அளவிற்கு ரசிகர்களின் காதுகளில் மெல்லிசை என்னும் தேனை வார்த்தார். மேலும் துள்ளளிசையிலும் ஒரு ரவுண்டு வந்தார். தன்னடக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றின் உருவமாக திகழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

Advertisement

இப்படி குரு சிஷ்யனாக இருந்தவர்கள் தான் ராஜா மற்றும் ரகுமான். இந்த நிலையில் நேற்று இளையராஜா ரகுமானின் ஸ்டியோவான FIRADUS Studio விற்கு வந்தார். இதை ரகுமான் தன்னுடைய பக்கதில் பகிர்ந்து இருந்தார். அத்துடன் அவர் ஒரு Captionஐ பகிர்ந்து இருத்தார் அதில் மாஸ்ட்ரோ அவர்கள் எங்கள் ஸ்டியோவிற்கு வந்ததால் மகிழ்ச்சி, அவர் இந்த ஸ்டியோவிற்காக ஒரு பாடல் கம்போஸ் செய்வார் என நம்புகிறோம் என்று ட்வீட் செய்து இருந்தார். அதை ரீட்வீட் செய்து இளையராஜா உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது என அறிவித்துள்ளார். இதனால் ராஜா மற்றும் ரகுமான் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in