ஐ.பி.எல் 2021 இல் இருந்து வீடு திரும்பிய முக்கிய வீரர்கள்! ஐயோ இவரும் கிளம்புறாரா?

ஐ.பி.எல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சென்ற வருடம் உலகமே கொரோனா நோயை எதிரித்து போராடி கொண்டிருந்தது. கொரோன பாதிப்பின் காரணமாக தாமதமாக தான் ஐ.பி.எல் 2020 நடைபெற்றது. இதை தொடர்ந்து இந்த ஆண்டின் ஐ.பி.எல் தொடர் ரசிகர்கள் யாருக்கும் அனுமதியில்லாமல் பல கட்டுப்பாடுகளுடன் நடந்து வருகிறது. இந்த சீசனில் முதல் இடத்தில் தற்போது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம்பிடித்துள்ளது.

ஐ.பி.எல் 2021 இல் இருந்து வீடு திரும்பிய முக்கிய வீரர்கள்! ஐயோ இவரும் கிளம்புறாரா? 1

விளம்பரம்

இரண்டாவது இடத்தில டெல்லி காப்பிடல்ஸ் அணியும் , மூன்றாவது இடத்தில விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் இடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு அணிக்கும் ஒரு சில முக்கியமான பிலயேர்கள் என்று இருக்கிறார்கள். அவர்களின் பெரும் பங்கு தான் அணியை வெற்றி பாதைக்கே அழைத்து செல்லும். உதாரணமாக நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூரு அணி மோதிய போட்டியில் ஜடேஜாவின் பெரும் பங்கு மூலியமாக தான் சென்னை அணி வெற்றிபெற காரணமாக இருந்தது.

ஐ.பி.எல் 2021 இல் இருந்து வீடு திரும்பிய முக்கிய வீரர்கள்! ஐயோ இவரும் கிளம்புறாரா? 2

விளம்பரம்

இதே போல் ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு பிலயேர்கள் உள்ளனர். அந்த வகையில் தற்போது டெல்லி அணியின் முக்கியமான வீரர் ஒருவர் வீடு திரும்பியுள்ள செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. டெல்லி அணியின் சூழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீடு திரும்பிவிட்டார். அவரது குடும்பத்தினர் கொரோன நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களை கவனமாக பார்த்துக்கொள்ள வீடு திரும்பினார் அஸ்வின்.

ஐ.பி.எல் 2021 இல் இருந்து வீடு திரும்பிய முக்கிய வீரர்கள்! ஐயோ இவரும் கிளம்புறாரா? 3

விளம்பரம்

அது மட்டுமில்லாது பெங்களூரு அணியை சேர்ந்த ஆடம் சாம்பா மாற்றம் கேன் ரிச்சர்ட்ஸன் வீடு திரும்புகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் போட்டிகளில் இந்த வீரர்கள் கலந்துகொள்ளமாட்டார்கள் என்ற இந்த செய்தி ஐ.பி.எல் ரசிகர்களை மிகவும் சோகத்துக்குள்ளாகியுள்ளது .

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment