சூர்யாவின் ஜெய்பீமில் இருந்து வெளியான செண்டுமல்லி!

சூர்யாவின் ஜெய்பீமில் இருந்து வெளியான செண்டுமல்லி! 1

சூர்யா நடிப்பில் வருகிற நவம்பர் இரண்டில் அமேசான் பிரைமில் வெளி வரவிருக்கும் திரைப்படம்தான் ஜெய்பீம்! படத்தின் தலைப்பிற்கு ஏற்றதற்கு போலவே படத்தின் ட்ரைலரும் கம்பீரமாகவே இருந்ததை நம்மில் பலரும் ஒப்புக்கொண்டிருப்போம். ஜெய்பீமை சூர்யா ஒப்புக்கொண்டதற்கான காரணத்தை திரைப்படத்தின் வாயிலாக காண அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் காத்திருக்கின்றனர்.

விளம்பரம்

மிகப்பெரிய ஒரு ஹீரோ இதுபோன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதென்பது தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதை சூர்யா மிகச்சிறப்பாக செய்கிறார், செய்துவருகிறார். ஜெய்பீமை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D தயாரிப்பு நிறுவனமே தயாரிப்பது இன்னும் சிறப்புக்குரிய ஒன்று. சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் நடித்த லிஜோ மோல் ஜோஸும் சில்லுக்கறுப்பட்டி புகழ் மணிகண்டனும் மிக முக்கியமான காதப்பாத்திரங்களில் நடித்திருக்கினறனர். தயாரிப்பாளராக வலம் வந்த டிஜெ.ஞானவேல் அவர்கள் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  உன்னை பார்த்தாலே எனக்கு எரியுது... ராஜியிடம் சண்டையிடும் கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

இத்திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், கர்ணன் புகழ் ராஜிஷா விஜயன், ராவ் ரமேஷ் போன்றோர் நடித்துள்ளனர். ஜெய்பீமிற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே தெருக்குரல் அறிவின் குரலிலும் வரியிலும் வெளிவந்த “பவர் சாங்” மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. வெளிவந்த மற்றொரு பாடலான “தலகோதும்” என தலைப்புடைய பாடலும் நம்மை உருக வைக்கவுள்ளதாக இருக்கிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  உறவினர் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் LEGEND சரவணன்

ஜெய்பீமில் இருந்து மூன்றாவது பாடலாக “செண்டுமல்லி” பாடல் வெளிவந்துள்ளது. ஷான் ரோல்டன் இசைக்கு யுகபாரதி அவர்கள் இயல்பாய் முத்துமுத்தாக வரிகளை எழுத ஆனந்து மற்றும் கல்யாணி ஐயர் பாட பாடலை கேட்பவர்களுக்கும் இன்னும் கேட்கலாம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  திருவண்ணாமலையில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த நடிகை சங்கீதா க்ரிஷ்

விளம்பரம்

 

ஒரு காதல் பாடலிலும் கதை மாந்தர்களின் வாழ்வியலை வரிகளின் மூலம் கடத்துவதில் யுகபாரதி கெட்டிக்காரர் என்று மீண்டும் ஒருமுறை நிறுவும் வகையில்தான் இப்பாடல் உள்ளது. ஷான் ரோல்டனின் இசையோடு வரிகள் பொருந்துவதென்பது வயலோரங்களில் வரும் காற்றை நியாபகம் செய்கிறது. அவ்வளவு இயல்பானதாக இருக்கிறது இப்பாடல்.

விளம்பரம்

செண்டுமல்லி பாடல் “அடிக்கரும்பா இனிக்குற நீ” என்ற வரிக்கு ஏற்றார்போல் உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment