சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்.
அண்மையில் இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் சரிவினை கண்டது.இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.இது ரஜினியின் 169வது படம் ஆகும்.இப்படத்தில் நிச்சயம் வெற்றிக்கான வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார்.
சன் பிக்சர் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது,அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,மிகப்பெரிய ஜெயில் செட் போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ சில நொடி காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் மேக்கிங் வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்
Here’s a glimpse of Superstar @rajinikanth from the sets of #Jailer 🤩
@Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/3EtAap0FUs
— Sun Pictures (@sunpictures) November 18, 2022
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in