The Indian Times

மேடையில் மரண ஆட்டம் போட்டு அசத்திய நடிகர் ஜெயம் ரவி

ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் ஆக மாறியுள்ளார் ஜெயம் ரவி .முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.மிருதன்,டிக் டிக் டிக் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து மக்களை வெகுவாக கவர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் நடிப்பில் வெளியாகிய தனி ஒருவன் படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக சினிமாவில் அமைந்தது.ஆதி பகவன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் ஜெயம் ரவி.அதிலும் குறிப்பாக பகவான் கதாபாத்திரத்தில் பிரித்து மேய்ந்திருப்பார்.ஹீரோ கதாபாத்திரம் மட்டுமில்லை வில்லன் கதாபாத்திரமும் கட்சிதமாக வரும் என பகவான் கதாபாத்திரத்தின் மூலம் தெரிவித்தார்.இவருக்கு அடுத்ததாக பூலோகம் எனும் படத்தினை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் என்பவர் இயக்கிய அகிலன் படம் விரைவில் வெளியாக உள்ளது.

Advertisement

இவருக்கு அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது.இப்படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்துள்ளார் ஜெயம் ரவி.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றது.அண்மையில் இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இவருக்காக சிறப்பு நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் நடனமாடுபவர்களுடன் இணைந்து ஜெயம் ரவி மிரட்டல் நடனம் போட்டு அரங்கினை அதிரவைத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Embed video credits : BEHINDWOODSTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in