The Indian Times

என் படம் ரிலீஸ் ஆகி 2 வருஷம் ஆச்சு – EMOTIONAL ஆன ஜெயம் ரவி

ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் ஆக மாறியுள்ளார் ஜெயம் ரவி .முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.மிருதன்,டிக் டிக் டிக் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து மக்களை வெகுவாக கவர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் நடிப்பில் வெளியாகிய தனி ஒருவன் படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக சினிமாவில் அமைந்தது.ஆதி பகவன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் ஜெயம் ரவி.அதிலும் குறிப்பாக பகவான் கதாபாத்திரத்தில் பிரித்து மேய்ந்திருப்பார்.ஹீரோ கதாபாத்திரம் மட்டுமில்லை வில்லன் கதாபாத்திரமும் கட்சிதமாக வரும் என பகவான் கதாபாத்திரத்தின் மூலம் தெரிவித்தார்.இவர் தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

Advertisement

இன்று இப்படத்தினை ரசிகர்களுடன் காண்பதற்கு சென்னையில் உள்ள திரையரங்கிற்கு ஜெயம் ரவி வருகை தந்தார்.அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,ரொம்ப சந்தோசமா இற்கு ,எங்க டீம் ஓட கஷ்டம்,கல்கி உடைய கனவு நனைவாகியுள்ளது.என் படம் வெளியாகி 2 வருஷம் ஆகுது தற்போது ரசிகர்களிடம் படம் பார்க்கும் பொழுது ஆனந்தமாக உள்ளது,அதற்கு நிகர் எதுவுமே கிடையாது.என நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

Embed video credits : Thanthi TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in