The Indian Times

சிம்பு நடிச்சா நான் நடிக்க மாட்டேன்-அதிரடி பதில் கூறிய ஜெயம் ரவி

ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் ஆக மாறியுள்ளார் ஜெயம் ரவி .முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.மிருதன்,டிக் டிக் டிக் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து மக்களை வெகுவாக கவர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் நடிப்பில் வெளியாகிய தனி ஒருவன் படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக சினிமாவில் அமைந்தது.ஆதி பகவன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் ஜெயம் ரவி.அதிலும் குறிப்பாக பகவான் கதாபாத்திரத்தில் பிரித்து மேய்ந்திருப்பார்.ஹீரோ கதாபாத்திரம் மட்டுமில்லை வில்லன் கதாபாத்திரமும் கட்சிதமாக வரும் என பகவான் கதாபாத்திரத்தின் மூலம் தெரிவித்தார்.இவருக்கு அடுத்ததாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது

Advertisement

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெயம் ரவி ,கார்த்தி மற்றும் த்ரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.அப்பொழுது பத்திரிகையாளர் ஒருவர் சிம்பு நடித்தால் நீங்க படம் நடிக்க மாட்டேன்னு சொன்னிங்கலாமே என கேள்வி எழுப்பினார்,அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி,முதலில் நான் சொன்னா கேட்க கூடிய ஆளா மணிரத்தினம்,அவர் எனக்கு ஒரு ரோல் கொடுத்துள்ளார் நான் நடித்துள்ளேன்.அனைவரும் அருகில் இருந்து பார்த்தபடி பேசுவார்கள் அதையெல்லாம் நம்பாதீர்கள் என கூறியுள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in