The Indian Times

பிரபல மலையாள நடிகருக்கு ஜோடியாக களம் இறங்கிய ஜோதிகா… வெளியாகிய FIRST LOOK POSTER

தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.ஆரம்ப கட்டத்தில் சூர்யா ஜோதிகாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்,இப்படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும் மேலும் இருவரது ஜோடி பொருத்தமும் படத்தில் மிக அழகாக உள்ள நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது.இறுதியில் திருமணமும் செய்துகொண்டனர்.

Advertisement

திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா குழந்தைகள் குடும்பம் என இல்லறவாழ்கையை கவனிக்க தொடங்கிவிட்டார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் கால் தடம் பதித்து படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார்.மேலும் கணவரின் தயாரிப்பு நிறுவனத்தையும் ஜோதிகா தான் பார்த்து கொள்கிறார்.அண்மையில் சிறந்த தயாரிப்பாளர் என சூரரைப்போற்று படத்திற்கு விருதினை பெற்றிருந்தார் ஜோதிகா

Advertisement

தற்போது மலையாள சினிமாவில் களம் இறங்கி இருக்கிறார்.மலையாளத்தில் நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக காதல் என்ற  புதிய படத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்தினை இயக்குனர் ஜியோ பேபி இயக்க உள்ளார்.இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை மம்மூட்டி வெளியிட்டுள்ளார் .இந்த முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது .ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in