வேறு பையனுடன் நிச்சயம் ஆன காதலிக்கு ஊர் முழுக்க “கவிதை” போஸ்டர் ஒட்டிய காதலன் | Viral

விளம்பரம்
விளம்பரம்

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்தவர் விஜய் ரூபன். இவர் அதே பகுதியில் பறவைகள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் களக்காடு நகராட்சியில் 2வது வார்டில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். தேர்தலில் வெறும் 18 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். இவர் கட்சியில் இருப்பது பிடிக்காமல் அவரது காதலி காதலை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்

வேறு பையனுடன் நிச்சயம் ஆன காதலிக்கு ஊர் முழுக்க "கவிதை" போஸ்டர் ஒட்டிய காதலன் | Viral 1

விளம்பரம்

 

இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தபோது நான் உன்னை காதலிக்கவில்லை, நட்பாகதான் பழகினேன் என்று சொல்லி அவரது காதலி விஜய் ரூபனிடமிருந்து விலகிச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் 10 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு வேறு பையனுடன் திருமணம் நிச்சயமானது. தேர்தலிலும் காதலிலும் படுதோல்வி அடைந்த விஜய்ரூபன் கடும் விரக்தி அடைந்தார். இந்த இரண்டு ஏமாற்றத்தையும் அவரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்

வேறு பையனுடன் நிச்சயம் ஆன காதலிக்கு ஊர் முழுக்க "கவிதை" போஸ்டர் ஒட்டிய காதலன் | Viral 2

எனவே நான்கு ஆண்டுகளாக தன்னுடன் பழகிய காதலியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை போஸ்டராக அச்சடித்து களக்காடு பகுதி முழுவதும் ஒட்டியுள்ளார் விஜய். குறிப்பாக நிச்சயம் ஆன பையன் வீட்டைச் சுற்றி போஸ்டர்களை ஒட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் செய்த இந்த செயலால் அந்த பெண்ணின் திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போஸ்டர் அடித்து அசிங்கப்படுத்திய அவரை போலீசார் தேடி வருகின்றனர். அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  சிவாஜியாகவே வாழும் சிவாஜி ரசிகர்..அச்சு அசல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment