The Indian Times

சின்னத்திரை நடிகரை மணக்கிறார் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர் | Kanmani Sekhar | Navin

கலர்ஸ் என்ற தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர்தான் “இதயத்தை திருடாதே”. இதில் புதுமுகமான நவீன் கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார். இவருக்கு ஜோடியாக சஹானா என்பவர் நடித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரியை பார்த்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் தங்கள் ஆவலை தெரிவித்து வந்தனர். ஏனெனில் ஏற்கனவே இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்னும் தொடர் மூலம் அறிமுகம் ஆனவர்கள் தான் சித்து மற்றும் ஸ்ரேயா. அவர்களையும் ரசிகர்கள் இவ்வாறு உசுப்பேற்றிவிடவே தற்போது அவர்கள் இருவரும் நிஜ தம்பதிகள் ஆகிவிட்டனர். Youtube Video Code Embed Credits: Galatta

Advertisement

ஆனால் நவீன்-சஹானா விஷயத்தில் அவ்வாறு நடக்கவில்லை. ஏனெனில் நவீனுக்கும், சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக வரும் கண்மணி சேகருக்கும் தான் திருமணம் முடிவாகியுள்ளது. அதை நவீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இருவரும் மீடியா துறையை சேர்ந்தவர்கள் என்பதாலும், கண்மணியும், நவீனும் நல்ல நண்பர்கள் என்பதாலும் இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் நிச்சயதார்த்தமும், ஜூன் மாதம் திருமணம் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இவர்கள் இருவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video…

Advertisement

https://youtu.be/bK0AEYUwLc0?t=25

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in