The Indian Times

காந்தாரா படத்திற்காக இயக்குனர் ரிஷப் ஷெட்டி வாங்கிய மிகப்பெரிய விருது… அப்படி என்ன விருதுன்னு தெரியுமா?

பிற மொழி படங்கள் தமிழில் வெற்றிபெறவும் தமிழ் ரசிகர்களை ஈர்ப்பதற்கு சில நாட்கள் ஆகும்.கேஜிஎப் படமும் தமிழில் எடுத்த உடனே வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வரிசையில் வெளியாகி பல நாட்கள் கழித்து தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் படம் காந்தாரா.கன்னட மொழி படமான இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படம் கன்னடத்தில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது படக்குழு இப்படத்தினை தமிழில் மொழிபெயர்த்து தமிழகத்தில் ரிலீஸ் செய்துள்ளது.இப்படத்தினை இயக்கியவர் ரிஷப் ஷெட்டி இவரே கதாநாயகனாகவும் நடித்து அசத்தியுள்ளார்.கேஜிஎப் படத்தினை தயாரித்த HOMBALE தயாரிப்பு நிறுவனம் தான் இப்படத்தினையும் தயாரித்துள்ளது. அஜனீஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதாநாயகியாக சப்தமி கௌடா நடித்துள்ளார்.

Advertisement

இப்படம் மாபெரும் வசூலை கன்னடத்தில் பெற்றுள்ளது.கேஜிஎப் படத்திற்கு பிறகு அதிக வசூல் பெற்ற படமாக காந்தாரா உள்ளது.இப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது தான் இரண்டாவது பாகம் இப்படத்தின் முதல் பாகம் தான் இனி எடுக்க உள்ளதாக இயக்குனர் மற்றும் கதாநாயகன் ரிஷப் அறிவித்திருந்தார்.தற்போது இப்படத்திற்காக மும்பையில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் ‘சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர்’ என்ற பிரிவில் காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in