The Indian Times

அதிதி சங்கரின் ஜோக்கை கேட்டு கதிகலங்கிய நடிகர் கார்த்தி ….

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அப்பா,அண்ணனை போல் தானும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என துணை இயக்குனராக மணிரத்தினத்திடம் பணியாற்றினார்.பின்னர் நடிகராக களம் இறங்கிவிட்டார்.அமெரிக்கா சென்று படித்த நடிகர் கார்த்தி தனது முதல் படமான பருத்திவீரன் படத்தில் மதுரை ஆளாக நடித்து அந்த மொழிகளிலேயே பேசி அனைவரையும் ஆச்சரியப்பட செய்தார்.முதல் படமே பெரும் ஹிட் அடித்து முன்னணி நடிகராக கார்த்தியை உருவாக்கியது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பையா படத்தில் நடித்தார்.அப்படமும் பெரும் ஹிட் கொடுத்தது இவருக்கு.இவ்வாறு தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் பட்டியலில் கார்த்தியும் குறுகிய காலத்திலேயே இணைந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அப்பா,அண்ணன் மூலம் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும்,தனது திறமையாலும்,கடின உழைப்பால் மட்டுமே இன்று இந்த இடத்தினை பிடித்துள்ளார்.தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்காக பெரும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.மேலும் தொடர்நது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் கார்த்தி.அந்த வரிசையில் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.அந்த வரிசையில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இரண்டாவது முறையாக விருமன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தில் கதாநாயகியாக நடிகை அதிதி சங்கர் அறிமுகமாகியுள்ளார்.நேற்று இப்படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் பேசிய நடிகர் கார்த்தி ,அதிதியை காலாய்த்துள்ளார்.அவர் கூறியதாவது,படத்தின் பூஜை அன்றே அதிதி என்னிடம் வந்து உலகிலேயே மிக பெரிய பணக்கார நாடு எது என என்னிடம் கேட்டார்,அதற்கு நானும் சூரியும் பதில் தெரியாமல் முழிக்க உடனே அதிதி பங்களாதேஷ் அங்கு தான் பங்களா நிறைய உள்ளது என கூறினார்,அன்றிலிருந்து அவர் ஜோக்கை கேட்டாலே நாங்கள் ஓடிவிடுவோம் என அதிதியை கலாய்த்துள்ளார்

Embed video credits : AMN TV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in