The Indian Times

ஒளியிலே தெரிவது தேவதையா!!! சிவராத்திரியை கொண்டாடிய கயல் சீரியல் சைத்ரா

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சைத்ரா ரெட்டி.இந்த தொடரில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றவர்.சின்னத்திரையில் முதன் முதலாக வில்லி கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அது சைத்ராவிற்காகத்தான் இருக்கும் அந்த அளவிற்கு இவர் நடிப்பு மக்களை அதிகம் கவர்ந்துள்ளது. வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்ட இவர் அதற்காக கன்னட சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நடித்தார்.பின்னர் அங்கிருந்து தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்துவிட்டார்.

Advertisement

கன்னடத்தினை விட தமிழக மக்கள் தான் இவருக்கு பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.தற்போது இவர் தமிழ் சினிமாவிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இதனை தொடர்ந்து மேலும் சின்னத்திரையில் வாய்ப்பு தேடி வந்த இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது,அதுவும் கதாநாயகியாக, அதனை சரியாக பயன்படுத்தி தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகையாக உருவெடுத்துள்ளார்

தற்போது இவர் சிவராத்திரியை திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையார் தரிசித்து கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்களை கயல் சைத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ரசிகர்கள் சைத்ராவின் பக்தியை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in