நயன்தாரா பற்றி KOFFEE WITH KARAN நிகழ்ச்சியில் பேசிய கரண்…வெடித்தது சர்ச்சை

விளம்பரம்
விளம்பரம்

பாலிவுட்டில் பிரபலமான நிகழ்ச்சி காபி வித் கரண் ,பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோகர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த ஜூலை 7 ஆம் தேதி தொடங்கியது.டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது .இந்த நிகழ்ச்சியில் முதல் விருந்தினராக நடிகை சமந்தா கலந்துகொண்டார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் இவருக்கும் இவர் முன்னாள் கணவருமான நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணத்தினை முறித்துக்கொண்டதற்கான காரணத்தினை கூறியுள்ளார்.இந்த நிகழ்ச்சி பெரும் வைரலாகியது

கட்டாயம் படிக்கவும்  என்ன என்னோட கலர் பத்தியே பேசுறே...நிகழ்ச்சியில் கடுப்பாகிய அறந்தாங்கி நிஷா

நயன்தாரா பற்றி KOFFEE WITH KARAN நிகழ்ச்சியில் பேசிய கரண்...வெடித்தது சர்ச்சை 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் கரண் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு விருந்தினர்கள் கட்டாயம் மறுக்காமல் பதில் கூறி விடுவார்கள்,அதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பே.இந்நிலையில் கரண் சமந்தாவிடம் தென்னிந்திய திரையுலகில் யார் நம்பர் 1 நடிகர் என கேட்டுள்ளார்,அதற்கு பதில் கூறிய சமந்தா நடிகை நயன்தாராதான் தென்னிந்தியாவில் நம்பர் 1 நடிகை என கூறியுள்ளார்.இதற்கு கரண் நயன்தாராவின் பெயர் என்னுடைய லிஸ்டில் இல்லை என கூறியுள்ளார்.இதனால் நயன்தாரா ரசிகர்கள் பொங்கி எழுந்தனர்.மேலும் கரண் ஜோகரை இணையத்தில் வளைத்து விமர்சிக்க தொடங்கினர்

கட்டாயம் படிக்கவும்  என் பாட்டுக்கு நான் ஆடலைனா எப்படி..மதுர வீரன் பாடலுக்கு மரண ஆட்டம் போடும் அதிதி ஷங்கர்

நயன்தாரா பற்றி KOFFEE WITH KARAN நிகழ்ச்சியில் பேசிய கரண்...வெடித்தது சர்ச்சை 2

விளம்பரம்

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து,கரண் ஜோகர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்,அதன்படி ஆரோமாக்ஸ் என்ற நிறுவனம் ஆனது நடிகைகளின் டாப் 10 பட்டியலை எனக்கு அனுப்பியது அதில் முதலிடத்தில் சமந்தாவின் பெயர் இருந்தது அதை வைத்துதான் கூறினேன்,நயன்தாரா ரசிகர்கள் தன்னை தவறாக புரிந்துகொண்டுள்ளதாக தெரிவித்து விளக்கமளித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment