விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உண்டு.இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த இரண்டு சீசன்கள் நிகழ்ச்சியை போலவே மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கி இருப்பவர் தான் குரேஷி.கலக்கப்போவது யாரு சீசன் 5ல் போட்டியாளராக அறிமுகமாகியவர் குரேஷி.தனது கடின உழைப்பினால் அந்த சீசனில் கடுமையாக போட்டியிட்டு டைட்டிலை தட்டி சென்றார்.கலக்கப்போவது யார் என்ற டைட்டிலை இவருக்கு வழங்கியதே சினிமாவில் கலக்கி வரும் சிவகார்த்திகேயன் தான்,இவரும் தனது வாழ்க்கையை இந்த டைட்டிலை வென்று தான் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற பிறகு குரேஷியின் திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.இந்த நிகழ்ச்சி மூலம் தற்போது இவர் மிக பிரபலம் ஆகி உள்ளார்.
தற்போது இவர் யூடியூப் சேனல் வைத்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் கடற்கரையில் அனுபவத்திற்காக அங்குள்ள கடையில் பானிபூரி விற்பனை செய்துள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து தனது சேனலில் பதிவிட்டுள்ளார். வீடியோவில் கடையின் ஓனர் குரேஷியை வேலை வாங்கி படாதபாடு படுத்தியுள்ளார்.மேலும் கடையின் முன்னே சென்று வாடிக்கையாளரை அழைக்க கூறியுள்ளார்,உடனே குரேஷியும் வாடிக்கையாளரை வாய் வலிக்க கூப்பிட்டுள்ளார்.இவரின் இந்த செயல் ரசிகர்களிடம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
Embed video credits : KURAISHI VIBES