The Indian Times

படத்துல அழுவுற சீன் வந்தா கூட சிரிப்பாங்க…கதறி அழுறத பாக்க முடியல..ரொம்ப வருத்தமா இருக்கு-கே.எஸ் ரவிக்குமார்

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் இவர்.இவர் நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.பின்னர் தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் மீனா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ரஜினிகாந்த் நடிப்பில் முத்து படத்தில் கதாநாயகியாக நடித்தார்,கமல்ஹாசன் நடிப்பில் அவ்வை சண்முகி படத்தில் கதாநாயகியாக நடித்தார்,அஜித்குமார் நடிப்பில் வில்லன் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்தார்.இந்த மூன்று படங்களுமே அவருக்கு பெரும் ஹிட் படங்கள் ஆகும்.மேலும் பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார் மீனா.இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.இவர் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அசத்தினார்.

Advertisement

நேற்று இவரது கணவர் வித்யாசாகர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த செய்தி திரை பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்த இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.காலை முதல் இவரது கனவை உடலுக்கு திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, செய்தியாளர்களை சந்தித்தார்,அப்பொழுது அவர் கூறியதாவது,படத்தில் அழகுற சீன் எடுக்கும் பொழுது கூட சிரிச்சிட்டே தான் இருப்பாங்க,இப்போ அவங்க கதறி அழுகிறத பார்க்க முடியவில்லை கஷ்டமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்

Embed video credits : polimer news

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in