கம்பி, சிவிங்கம், டார்ச்லைட்.. உண்டியல் பணத்தை நூதனமாக திருடும் வாட்ச்மேன்கள் | Kumabakonam Temple

விளம்பரம்
விளம்பரம்

கோயில்களுக்கு மிகப்பிரசித்தி பெற்ற நகரம் கும்பகோணம். நவக்கிரகங்கள் தனித்தனியாக உள்ள தலங்கள் நிறைந்த கோவில்கள் உள்ள ஊர். இந்த ஊரில் உள்ள கோவில்களில் ஒன்றுதான் சக்கரபாணி திருக்கோவில். இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இங்கு தினமும் இரவு நடக்கும் திருட்டு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் வரும் காட்சியை முன்மாதிரியாக கொண்டு இந்த திருட்டை அந்த கோவில் பணியாற்றி வரும் இரவு நேர வாட்ச்மேன்களே நடத்தியுள்ளது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்பி, சிவிங்கம், டார்ச்லைட்.. உண்டியல் பணத்தை நூதனமாக திருடும் வாட்ச்மேன்கள் | Kumabakonam Temple 1

விளம்பரம்

இங்கு பகலில் சேகர் என்ற வாட்ச்மேன் பணியாற்றி வருகிறார். அவரது மகன் சக்கரராஜா மற்றும் தினகரன் என்ற இருவர் இரவு நேர வாட்ச்மேன்களாக பணியாற்றி வருகின்றனர். அதிகாரிகள் கோவிலில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இரவு திடீரென கோவிலுக்குள் நுழையும் சக்கரராஜா மற்றும் தினகரன் பணம் துவாரம் மூலம் டார்ச்லைட் அடித்து பார்க்கின்றனர். பிறகு ஒரு நீளமான கம்பியில் முனையில் சுவிங்கத்தை ஒட்டி அதை உண்டியலுக்குள் விட்டு 100,200,500 பணத்தை மட்டும் எடுக்கின்றனர். இரவு நேரங்களில் பணம் தேவைப்படும் போதெல்லாம் இவர்கள் இவ்வாறு திருடி வருவது தெரியவந்துள்ளது.

கம்பி, சிவிங்கம், டார்ச்லைட்.. உண்டியல் பணத்தை நூதனமாக திருடும் வாட்ச்மேன்கள் | Kumabakonam Temple 2

விளம்பரம்

இதுகுறித்து கும்பகோணம் போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தமிழ்திரைப்படம் ஒன்றில் இப்படி கம்பியில் சிவிங்கத்தை ஒட்டி நூதன முறையில் பணத்தை திருடும் காட்சி இடம் பெற்று இருக்கும். அதே பாணியில் இவ்வாறு நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. திருடிய சிசிடிவி ஆதாரங்களை கொடுத்தும் போலீசார் அவர்கள் மீது சரியான நடவடிக்கை இல்லை என கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the video below

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment