லால் சலாம் திரை விமர்சனம்

நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்துள்ளனர்.லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்

லால் சலாம் திரை விமர்சனம் 1

விளம்பரம்

படத்தின் கதை

மொய்தீன் பாயாக வரும் நடிகர் ரஜினிகாந்த் 3ஸ்டார் என்ற கிரிக்கெட் அணியை தொடங்கி வைக்கிறார். ஆரம்பத்தில் அதில் விளையாடிய விஷ்ணு விஷால் அங்கிருந்து எம்சிசி அணிக்கு செல்கிறார். இதனால் ரஜினிகாந்த் மகனான விக்ராந்தை 3ஸ்டார் அணியில் விளையாட வைக்கின்றனர். சிறுவயதில் இருந்தே விஷ்ணுவிஷாலுக்கும் விக்ராந்துக்கும் இடையே ஆகாது என்பதால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருகிறது. இப்படி மோதிக்கொள்ளும் இவர்களை வைத்து அரசியல் ஆதாயங்களை தேட முயற்சி செய்கின்றனர். இதன்பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதை

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா

லால் சலாம் திரை விமர்சனம் 2

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

வழக்கம் போல் சூப்பர் ஸ்டார் படத்தில் நடிப்பினால் மிரட்டி எடுத்திருக்கிறார். திரையில் அவர் தோன்றும் பொழுது நம்மை மிரள வைத்து இருக்கிறார். மத அரசியலால் இளைஞர்கள் வாழ்க்கை எப்படி ஆகிறது என்பதை அழகாக எடுத்து காண்பித்து இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இளைஞராக நடித்த விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் மிரட்டி உள்ளனர். பல இடங்களில் ரஜினிகாந்த் பேசும் வசனங்கள் கிளாப்ஸ்களை ரசிகர்களிடம் இருந்து பெற்று கொடுத்து இருக்கிறது.ஏஆர் ரஹ்மான் பாடல்களில் ஜலாலி மற்றும் தேர்த்திருவிழா பாடல் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பின்னணி இசை பெரிதாக அமையவில்லை. படங்களில் தொய்வு மட்டும் சில இடங்களில் ஏற்படாமல் இருந்திருந்தால் சலாம் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் கல்யாணத்திற்கு வருகை தந்த பிரபலங்கள்

லால் சலாம் படத்திற்க்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் 2.5/5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment