நில மோசடி விவகாரம்..நடிகர் சூரி அளித்துள்ள புகாரின் படி நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் கொடவாலாவிடம் தீவிர விசாரணை

நடிகர் சூரி தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்.சினிமாவில் அடித்தட்டு வேலைகளை செய்து சிறிய சிறிய வேடங்களில் நடித்து இன்று தளபதி விஜய்,அஜித்குமார்,சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.கடின உழைப்பினால் இவர் இந்த அளவிற்கு வாழ்க்கையில் முன்னேறியுள்ளார்.இவரது நகைச்சுவைகள் பலராலும் ரசிக்கப்பட்டு பார்க்கப்பட்டு வருகிறது.தற்போது ஹீரோ ஆகவும் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இவரும் நடிகர் விஷ்ணு விஷாலும் நல்ல நண்பர்கள்.பல படங்களில் இணைந்து நடித்து அசத்தியுள்ளார்கள்.இவர்கள் கூட்டணிக்கு எப்பொழுதும் மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு.

கட்டாயம் படிக்கவும்  நடிகை ஸ்ருதி ஹாசன் சிறுவயதில் தந்தை கமல் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ

நில மோசடி விவகாரம்..நடிகர் சூரி அளித்துள்ள புகாரின் படி நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் கொடவாலாவிடம் தீவிர விசாரணை 1

விளம்பரம்

இந்நிலையில் நடிகர் சூரி நிலம் வாங்க விஷ்ணு விஷால் தந்தையிடம் பணம் அளித்துள்ளார்.அதன்படி நிலத்தையும் வாங்கியுள்ளார்.வாங்கிய நிலம் பிடிக்காமல் வேறு நிலத்தினை வாங்கி தரும்படி சூரி கூறியுள்ளார்,அதற்கும் சரி என கூறியுள்ளார் விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ்.ஆனால் நீண்ட நாட்களாகியும் நிலத்தினை தராமல் இருந்ததால் பணத்தினை திரும்ப கேட்டுள்ளார் சூரி,அதற்கு பாதி பணத்தினை மட்டுமே கொடுத்து மீதி பணத்தினை தரவில்லை என மோசடி புகாரை அளித்துள்ளார் சூரி.இந்த புகாரின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.இதுவரை சூரி மூன்று முறை விசாரணைக்கு நேரில் ஆஜராகிய நிலையில்,விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா ஆகிய இருவருக்கும் நேரில் விசாரணைக்கு ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மாடித்தோட்டம் வைத்து விவசாயம் செய்யும் நடிகை சீதாவின் புகைப்படங்கள் இதோ

நில மோசடி விவகாரம்..நடிகர் சூரி அளித்துள்ள புகாரின் படி நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் கொடவாலாவிடம் தீவிர விசாரணை 2

விளம்பரம்

அதன்படி சென்னை காவல் ஆணையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகினர்.அவர்கள் இருவரிடமும் தொடர்ந்து பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.விசாரணைக்கு பதில் அளித்த அவர்கள் தங்கள் மேல் எந்த தவறும் இல்லை என்று கூறியதாக சொல்லப்படுகிறது இந்நிலையில் மீண்டும் நடிகர் சூரியிடம் இதுகுறித்து விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.நல்ல நண்பர்களாக வலம் வந்த இருவர் தற்போது பண விசயத்தினால் இவர்களுக்குள் இவ்வளவு பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது என வருத்தத்துடன் இவர்களது ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அஜித்தின் ரீல் மகள் அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

நில மோசடி விவகாரம்..நடிகர் சூரி அளித்துள்ள புகாரின் படி நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் கொடவாலாவிடம் தீவிர விசாரணை 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment