ஜெய் பீம் படத்தின் உண்மையான கதாநாயகிக்கு வீடு கட்ட காசு வழங்கிய ராகவா லாரன்ஸ்

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா,ரஜிஷா விஜயன்,பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்த திரைப்படம் ஜெய் பீம்.இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அமேசான் ஓடிடி தளத்தில் படம் வெளியாகியது.இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை அளித்தாலும் படத்தின் கதை அவர்களை ஏமாற்றவில்லை.உண்மை சம்பவத்தின் அடிப்படையை மையக்கருவாக கொண்டு தயாரிப்பாளர் படத்தினை வடிவமைத்துள்ளார்.இப்படம் சூர்யா ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தினை பார்த்த பலரும் இயக்குனரை புகழ்ந்தும் பாராட்டியும் தள்ளினர் மேலும் இப்படத்தில் பெரிய ஹீரோ சூர்யா நடித்ததினால் தான் இப்படியெல்லாம் நடந்துள்ளது என்பதே தெரிகிறது என நடிகர் சூர்யாவும் பாராட்டு மழையில் நனைத்தனர்.

கட்டாயம் படிக்கவும்  குட் நைட் - திரைவிமர்சனம் (?/5)

ஜெய் பீம் படத்தின் உண்மையான கதாநாயகிக்கு வீடு கட்ட காசு வழங்கிய ராகவா லாரன்ஸ் 1

விளம்பரம்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் உள்ள முதனை கிராமத்தினை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு ,1993 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இவரை போலீசார் லாக்கப்பில் வைத்தே அடித்து கொன்றுள்ளனர்.இந்த வழக்கில் ஆஜராகி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்தவர் வக்கீல் சந்துரு.இந்த கதையா மையமாக கொண்டு முழுக்கத்தையும் மக்கள் முன்பு கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் இயக்குனர் கணவரின் சாவுக்கு காரணமானவர்களை தண்டிக்கும் வரை போராடிய இவரது மனைவி பார்வதியம்மாள் தற்போதும் அதே கிராமத்தில் வசித்து வருகிறார்.இவரது நிலை குறித்து கேள்விப்பட்ட நடிகர் லாரன்ஸ் அவருக்கு வீடுகட்டி தருவதாக அறிவித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  ஐபிஎல் பார்க்க வந்த நடிகை ஹன்சிகாவின் புகைப்படங்கள் இதோ

ஜெய் பீம் படத்தின் உண்மையான கதாநாயகிக்கு வீடு கட்ட காசு வழங்கிய ராகவா லாரன்ஸ் 2

விளம்பரம்

இந்நிலையில் இப்படத்திற்கு பிறகு தமிழக அரசு கவனம் பார்வதி அம்மாள் பக்கம் திரும்பியது.உடனடியாக அவருக்கு வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வீடும் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சொன்ன வாக்கை மீறக்கூடாது என்பதால் அவருக்கு வீடு கட்டிக்கொடுக்கும் பணமான 5 லட்ச ரூபாயை அவரிடம் ஒப்படைத்தார்.இந்த செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரவே பலரும் ராகவா லாரன்ஸை வாழ்த்தி பாராட்டி வருகின்றனர்.நடிகர் ராகவா லாரன்ஸ் சொந்தமாக ட்ரஸ்ட் வைத்து பலருக்கும் உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.பலரும் அவரை நாடி உதவியை பெற்றுள்ளனர் தற்போது ராகவா லாரன்ஸின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment