லியோ – முழு திரை விமர்சனம் இதோ

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் லியோ.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க,செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் சஞ்சய் தத்,அர்ஜுன்,த்ரிஷா,மிஸ்கின்,சாண்டி ,பிக் பாஸ் ஜனனி என பெரும் நட்சத்திரங்கள் பட்டாளங்கள் நடித்துள்ளது.இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது ,இப்படத்தின் விமர்சனத்தை கீழே விரிவாக காண்போம்

லியோ - முழு திரை விமர்சனம் இதோ 1

விளம்பரம்

படத்தின் கதை

ஹீரோ பார்த்திபன்(விஜய்) காஷ்மீரில் காபி ஷாப் வைத்து நடத்தி வருகிறார் மேலும் மனைவி த்ரிஷா மகன் மற்றும் மகளுடன் அழகிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.அப்பொழுது அங்கு வரும் சாண்டி மற்றும் மிஸ்கின் குருப்பினால் விஜய்க்கு மிக பெரிய பிரச்னை வருகிறது,இதன்மூலம் விஜயின் புகைப்படம் உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் வெளியாகிறது,விஜயை பார்த்த தாஸ் அண்ட் கோவிற்கு இது லியோ ( விஜய் )என்பது தெரிய வருகிறது, உடனே அவரை லியோ என தேடி செல்கின்றனர், கடைசி வரை அவர் தான் லியோ இல்லை என மறுக்கிறார்,இறுதியாக இவர் தான் லியோவா அல்லது இன்னொரு விஜய் உள்ளாரா? தாஸ் அண்ட் கோ லியோவை ஏன் தேடுகிறார்கள்,பார்த்திபன் விஜய் தாஸ் அண்ட் கோவிடம் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றி எப்படி தப்பிக்கிறார் என்பது மீதி படத்தின் கதை

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

லியோ - முழு திரை விமர்சனம் இதோ 2

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

இதுவரை இல்லாத அளவுக்கு விஜய் இந்த கதாபாத்திரங்களுக்கு அதிக மெனக்கெடல்கள் கொடுத்து அசத்தியிருக்கிறார்.இந்த படத்தில் புதிய விஜயை அனைவராலும் கட்டாயம் பார்க்க முடிகிறது.குறிப்பாக சண்டை காட்சிகளில் விஜய் மிரட்டியுள்ளார் என்று தான் சொல்லவேண்டும்,அனிருத்தின் இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது,விஜயின் ஒவ்வொரு காட்சிகளையும் பிஜிஎம் இசை போட்டு அறிமுக காட்சி போல ரசிகர்களை ஆரவாரம் ஆக்க செய்துள்ளார்.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைக்கதையை அற்புதமாக கையாண்டு அழகான படைப்பை கொடுத்துள்ளார்.மனைவியாக வரும் த்ரிஷா தனது நடிப்பில் சதம் அடித்துள்ளார் ,அதே போல் வில்லனாக வரும் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுனும் அவர்கள் நடிப்பில் சிறந்து விளங்கி அனுபவ நடிப்பை காண்பித்து அசத்தியுள்ளார்.மிஸ்கின் மற்றும் சாண்டி அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளது பாராட்டுக்குரியது.அதுபோல் படங்களில் நடித்த மடோனா செபாஸ்டின்,மன்சூர் அலிகான்,ப்ரியா ஆனந்த் அனைவரும் அவர்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.மேலும் ஹய்னா சண்டையில் கிராபிக்ஸ்கள் இல்லாமல் நேரடியாக சண்டை போடுவது போல வடிவமைத்துள்ளது மிகப்பெரிய அளவு ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றுள்ளது.விஜயின் டைட்டில் கார்டில் ஆரம்பித்து இறுதியில் LCUல் கனெக்ட் செய்யும் வரை லோகேஷ் தனது இயக்கத்தின் மூலம் பிரம்மிப்படைய செய்து இருக்கிறார்.படத்தின் மிகப்பெரிய மைனஸ் என்னவென்றால் இரண்டாம் பாதியில் ஏற்பட்ட தொய்வு மற்றும் லியோ கதாபாத்திரத்தை அழுத்தமாக காண்பிக்காததே ஆகும்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

லியோ படத்திற்கு தி இந்தியன் டைம்ஸ் வழங்கும் ரேட்டிங் – 4/5

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment