லயனுக்கும் டைகருக்கும் பொறந்தவன்டா என் புள்ள….குத்துசண்டை வீரனாக அனைவரையும் கும்மியெடுத்த விஜய் தேவர்கொண்டா | LIGER TRAILER லிகர் ட்ரைலர்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் தேவர்கொண்டா.இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே தெலுங்கில் உள்ளது.அறிமுகமாகிய சில வருடங்களிலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார் விஜய் தேவர்கொண்டா .தெலுங்கு சினிமாவில் 2011 ஆம் ஆண்டு வெளியாகிய நுவிலா என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் இவர்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்கள் வரிசையாக தெலுங்கில் நடிக்க தொடங்கினார்.எந்த படமும் சரியான வாய்ப்பினை பெற்று தராத நிலையில் ஒரு நாள் வெற்றிபெறுவோம் என போராடினார்.அவர் போராட்டத்திற்கும் கடின உழைப்பிற்கும் பலனாய் அர்ஜுன் ரெட்டி அமைந்தது.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் தேவர்கொண்டா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  மொட்டைமாடி போட்டோஷூட்டில் கலக்கும் சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்

லயனுக்கும் டைகருக்கும் பொறந்தவன்டா என் புள்ள....குத்துசண்டை வீரனாக அனைவரையும் கும்மியெடுத்த விஜய் தேவர்கொண்டா | LIGER TRAILER லிகர் ட்ரைலர் 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை தெலுங்கு சினிமாவில் கொடுத்துள்ளார்.தற்போது குஷி எனும் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.இந்நிலையில் தற்போது இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லிகர் படத்தில் விஜய் தேவர்கொண்டா நடித்துள்ளார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.காரணம் இப்படத்தில் இவருக்கு வில்லனாக பிரபல குத்துசண்டை வீரர் மைக் டைசன் நடித்துள்ளார்.குத்துச்சண்டையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கடற்கரையை சுத்தம் செய்த நடிகை ரெஜினா கேசன்ட்ரா

லயனுக்கும் டைகருக்கும் பொறந்தவன்டா என் புள்ள....குத்துசண்டை வீரனாக அனைவரையும் கும்மியெடுத்த விஜய் தேவர்கொண்டா | LIGER TRAILER லிகர் ட்ரைலர் 2

விளம்பரம்

இப்படம் தெலுங்கு,ஹிந்தி,தமிழ்,கன்னடம்,மலையாளம் என பல மொழிகளிலும் வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தின் ட்ரைலெர் படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தில் ரம்யாகிருஷ்ணன் மிரட்டலான அம்மாவாக நடித்துள்ளார்.சாதாரண ஏழை குடும்பத்தில் உள்ள பையன் திறமையால் எப்படி குத்துச்சண்டையில் வெற்றிபெறுகிறான் என்பதை சிறப்பாக வடிவமைத்துள்ளார் இயக்குனர்,இதனை ட்ரைலரை பார்க்கும்பொழுது தெரிகிறது.இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  வியட்னாம் நாட்டில் விடுமுறையை கொண்டாடும் சீரியல் நடிகை கேபிரியல்

விளம்பரம்

Embed video credits : sony music south

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment