The Indian Times

எனக்கு எவண்டா கேட் போட்டது..? – நட்சத்திர விடுதிக்குள் நுழைந்த சிங்கம் – வைரல் வீடியோ

காட்டுக்குள் இருந்து விலங்குகள் வருவது வழக்கம் ஆகி விட்டது. அதிலும் சமீப காலமாக பல இடங்களில் விலங்குகள் நடமாட்டம் அதிகம் ஆகி கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உலகமயமாக்கல் என்றும் பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்கள் கருத்தை கூறி வருகின்றனர். இதனால் விலங்குகளுக்கு காட்டில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து இங்கு ஒரு சிங்கம் அப்படி தான் தன் காட்டை விட்டு வெளியே வந்து ஹோட்டலில் தங்கி உள்ளது. ஆம், இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் கடந்த திங்கள் கிழமை அன்று சுமார் ஐந்து மணி அளவில் சிங்கம் ஒன்று அந்த பகுதியில் உள்ள ஹோட்டலில் நுழைந்து இருக்கிறது.

Advertisement

இதையடுத்து அங்குள்ள காவலாளி அங்கிருந்து பின் பக்கமாக ஓடி ஃபோன் செய்து தகவலை தெரிவித்தார். அதற்குள் அந்த சிங்கம் ஹோட்டல் பின் புறமாக சென்று அந்த ஹோட்டலின் ஹாலில் நுழைந்து விட்டது. அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in