எல்லார்த்துக்கும் ஒரு Limit இருக்கு….நெல்சன் Troll குறித்து லோகேஷ் கனகராஜ் பதில்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் லோகேஷ்.அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார்.இவர் இயக்கி 3 படங்களும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.உலகநாயகனின் தீவிர ரசிகர் ஆன லோகேஷ் உலகநாயகனை வைத்து படம் எடுக்க முடிவு செய்து அவருக்காக விக்ரம் கதையினை தயார் செய்து,கமல்ஹாசனிடம் கூறவே கதை பிடித்த கமல் இதனை நானே தயாரிக்கிறேன் என விக்ரம் ஆரம்பமாகியது.

கட்டாயம் படிக்கவும்  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மனைவியின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ

எல்லார்த்துக்கும் ஒரு Limit இருக்கு....நெல்சன் Troll குறித்து லோகேஷ் கனகராஜ் பதில் 1

விளம்பரம்

விக்ரம் படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பினை உலகம் முழுவதும் பெற்று வசூல் சாதனையை படைத்தது வருகிறது.
ரசிகர்களின் பாராட்டு மழையில் இயக்குனர் லோகேஷ் மற்றும் உலகநாயகன் நனைந்து வருகின்றனர்.அந்தளவிற்கு ரசிகர்களின் மனதினை வெகுவாக கவர்ந்துள்ளது விக்ரம்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தளபதி விஜயை வைத்து அடுத்த படத்தினை இயக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார் நெல்சன்.மேலும் கைதி 2 ஆம் பாகம் கதையும் தயாராகி வருகிறது.அதே சமயம் இயக்குனர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் நெல்சனை இணையவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயன் புதிய படம்... துவக்கி வைத்த உலகநாயகன்

எல்லார்த்துக்கும் ஒரு Limit இருக்கு....நெல்சன் Troll குறித்து லோகேஷ் கனகராஜ் பதில் 2

விளம்பரம்

இதுகுறித்து அண்மையில் பேட்டியளித்த லோகேஷ் கனகராஜிடம் கேட்டபொழுது அவர் கூறியதாவது,நெல்சனை கிண்டல் பண்ணுவது எனக்கு மிகுந்த கஷ்டமாக உள்ளது அவர் எனக்கு நெருங்கிய நண்பர் ஜாலியாக பேசுவார் அவர் அப்படி ஜாலியாக பேசியதை தவறாக எடுத்துக்கொண்டு கிண்டல் செய்கின்றனர்.வெற்றி அடையும் பொழுது கொண்டாடி விட்டு தோல்வி அடையும் பொழுது விமர்சனம் செய்வது வாடிக்கையான விஷயம் ஆகும்.ஆனால் அளவுக்கு மீறும் விமர்சனங்கள் நல்லது இல்லை என தெரிவித்துள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment