The Indian Times

“அவரு இப்படி தான்!” ராஜுவின் மறுமுகத்தை பற்றி பகிரங்கமாக சொன்ன மதுமிதா! Madhumitha About Raju JeyaMohan

பிக் பாஸ் வீட்டில் வித்தியாசமாகவே வலம் வந்தவர் தான் மதுமிதா! இலங்கை தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவர் இவர் என்பதும் போட்டியில் கலந்துகொண்ட பிறகு மக்களுக்கு தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் பிறந்து வளர்ந்த பெண் என்பதால் தமிழ் இவர் வாயில் தத்தளித்து கொண்டிருந்ததும் நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு தெரிந்த ஒரு விஷயமே! ஆரம்பத்தில் இவர் தமிழ் பேச மிகவும் தடுமாறினாலும் பிறகு சக போட்டியாளர்களின் தமிழை கேட்டு கேட்டு மதுவும் தமிழ் பேச கற்றுக்கொண்டார்!

Advertisement

வீட்டில் பெரிதாக விளையாட்டு நுணுக்கங்களுடன் இவர் விளையாடவில்லை என்பதே உண்மை! ஏனெனில் தூய்மையான அன்புடன் மக்களுடன் பழக தெரிந்த இவருக்கு விளையாட்டில் ஒருவர் மேல் பொய் பழி அல்லது போட்டி போடும் வழக்கம் இவருக்கு பெரிதாக இருந்ததில்லை! மக்களின் ஆதரவை கொஞ்சம் கொஞ்சமாக பெற்று வந்த இவர் திடீரென வீட்டிலிருந்து வெளியேற்றப்பட காரணமும் இவர் போட்டியில் ஆர்வமில்லாமல் விளையாடியதும் தான்! அது மட்டும் இல்லாமல் சுருதி தாமரைக்கு வீட்டில் உள்ள போட்டியாளர்கள் விளையாடி வாங்கி தந்த நாணயத்தை சுருதி தாமரை துணி மாற்றும் நேரத்தில் திருடினார்!

Advertisement

அதற்கு விளையாட்டில் இது சகஜம் என சுருதியின் பக்கம் துணை நின்றதே மக்கள் இவர்மேல் அதிருப்தி அடைய கூடுதல் காரணமாக கருதப்படுகிறது! வீட்டை விட்டு வெளியேறிய பின் மக்களுக்காக அளித்த முதல் பேட்டி ஒன்றில் தாமரைக்கு நடந்த அநீதி சரி என்றும் சுருதிக்கு ஆதரவாக பேசியுள்ளார்! அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது! அந்த விடியோவை நீங்களும் பாருங்கள்! Watch The Video Below!…

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in