The Indian Times

என் கல்யாணத்தை பண்ணி வச்சதே என் பையன் தான்- மகாலட்சுமி ரவீந்தர்

லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர்.பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.இவர் தற்போது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பலர் இவர்கள் திருமணத்தினை கிண்டலடித்து வருகின்றனர்.இருப்பினும் எதை பற்றியும் கவலைப்படாமல் மனைவியுடன் தனது வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டார் ரவீந்தர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மகாலட்சுமி முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.இவருக்கு சின்னத்திரையில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

இவர்கள் இருவரது திருமணமும் பெரும் விமர்சனம் போன்று பேசப்பட்டு வருகிறது.அண்மையில் தனியார் யூடியூப் சேனலுக்கு மகாலக்ஷ்மி அளித்த பேட்டி ஒன்றில் ,எனது திருமணத்தினை முன் நின்று நடத்தி வைத்ததே என் பையன் தான்,அவர் தான் எனக்கு டிரஸ், நகைகள் என எல்லாத்தையும் தேர்ந்தெடுத்தார் என கூறியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Embed video credits : cinema vikatan

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in